bestweb

செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

02 Jul, 2025 | 05:48 PM
image

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா, படப்பிடிப்புடன் தொடங்கியது.

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் செல்வராகவன், குஷி ரவி, வை. ஜி. மகேந்திரன், மைம் கோபி , கௌசல்யா, சதீஷ், சேலம் தீபக், ஹேமா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரவிவர்மா. கே ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. பிரியன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை வியோம் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை திருமதி விஜயா சதீஷ் வழங்குகிறார்.

இதனிடையே செல்வராகவன் நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி', 'ராயன்', 'சொர்க்கவாசல்', ' டி டி நெக்ஸ்ட் லெவல்'  ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது என்பதும் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்த ' பகாசுரன் ' திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றியை பெற்றது என்பதும் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார் என்பதால் இப்படத்திற்கு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right