இன்றைய திகதியில் எம்மில் பலரும் அவர்களுடைய உயரத்திற்கு ஏற்ற வகையில் உடல் எடையை இல்லாமல் அதிக எடையுடனோ அல்லது உடற் பருமனுடன் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு விரைவாக முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை ஸ்பைன் எண்டோஸ்கோபி சர்ஜேரி எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்கலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்றைய சூழலில் மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓய்வு இல்லாமல் உழைக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுடைய முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. முதுகு தண்டுவட பகுதியை ஒன்றிணைக்கும் டிஸ்க் எனப்படும் வட்டுகள்.. இயல்பான அளவைவிட கூடுதல் எடையின் காரணமாக அல்லது கூடுதல் செயல் திறன் காரணமாக அதனுடைய உராய்வினை இழந்து விரிசல் அடைந்து நரம்பை அழுத்தி வலியை ஏற்படுத்துகிறது.
இத்தகைய தருணத்தில் வைத்திய நிபுணர்கள் எம் ஆர் ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் போன்ற நவீன பரிசோதனைகளின் மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து முதுகு தண்டுவட பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் வட்டுகளில் ஸ்பைன் எண்டாஸ்கோபி சரஜேரி எனப்படும் நவீன சத்திர சிகிச்சையை மேற்கொண்டு பாதிப்பிற்கு நிவாரணம் வழங்குகிறார்கள்.
இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு நோயாளிகள் வைத்தியர்களின் பரிந்துரைகளை முழுமையாக கடைப்பிடித்தால் சத்திர சிகிச்சையின் வெற்றி வீதம் அதிகரிப்பதுடன் மேலும் முதுகுத் தண்டுவடத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தற்காத்துக் கொள்ள இயலும் என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
- வைத்தியர் தங்கவேலு
தொகுப்பு - அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM