இலங்கை கடற்படையினாரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுவையைச்சோந்த படகுகளை விடுவிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள நிலையில் மீன்பிடி தொழிலாளர்களிடையே ஏறபட்டுள்ள பீதியால் மீபிடிக்கச் செல்லவில்லை.  

கடந்த ஆறாம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் மீன்வளத்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட புதிய கடற்தொழிற்சட்டதை வாபஸ் பெற வலியுறுத்தியும், புதிய சட்டத்திற்கு  இந்திய அரசு கண்டனம் தெரிவிப்தோடு சட்டத்தை வாபஸ் செய்ய வலியுறுத்த வேண்டும்  என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 9 ஆம் திகதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்பபோராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் மீனவசங்கத்தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்தையை தொடர்ந்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனர் .

இதனையடுத்து இன்று வழக்கம் போல மீன்பிடிக்கச் செல்வதாகவும் அறிவத்திருந்த நிலையில் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை மற்றும் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை என்ற புதிய சட்டத்தால் மீன்பிடி தொழிலாளர்களிடையே கடும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு மீன்பிடி தொழிலாளர்கள் வருகையின்றி துறைமுகம் வெறிச்சோடியதால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 850 விசைப்படகுகள் உள்ள நிலையில் இன்று 30 க்கும் குறைவான படகுகளே மீன்பிடிக்கச் சென்றுள்ளது. 

இந்நிலை நீடித்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் அழிந்துவிடுவதோடு மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகும் அபாய நிலை ஏற்படும் என மீனவ அமைப்புகள் கருத்து தெரிவித்தள்ளனர்.

இந்நிலையில்   இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட வலை மீன்பிடிப்பில் ஈடுபட்டு கடல்வளங்களையும் மீன்வளத்தையும் அழித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த 2015 ஆம் ஆண்டு மே 10 ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை ராமநாதபுரம் மாவட்டததை சேர்ந்த 11 படகுகளும்,புதுக்கோட்டை மாவட்டம் 3 படகுகளும் தூத்துக்குடியைச்சோந்த ஒரு நாட்டுபடகு ,நாகை மாவட்டதை சேர்ந்த 21 படகுகளும் பாண்டிச்சேர்யைச் சேர்ந்த 6 படகுகள் உட்பட 42 படகுகளை இந்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை வெளியுறவுத்தறை அமைச்சகம் விடுவிக்க பரிந்துரை செய்தது இதனையடுத்து மன்னார், ஊர்க்காவல்துறை திருகோணமலை மற்றும் புத்தளம்  நீதிமன்ற நீதிவான்கள்  படகுகளின் வழக்கை ரத்து செய்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளனர் .

விடுவிக்கப்பட்ட படகுகளை எதிர்வரும் திஙகட்கிழமை இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க இலங்கை மீன்வளத்தறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.