வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காகவே அனைவரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சிலருக்கு வெற்றியும், பலருக்கு தோல்வியும் கிடைத்து வருகிறது. வெற்றி பெற்றவர்களின் வாழ்வியல் முறையை உற்று நோக்கினால் அவர்கள் வாரம் தவறாமல்... நாள் தவறாமல்... குறிப்பிட்ட சில பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்கி வருவதை காணலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள்... நவ கிரகங்களின் அருளைப் பெற வேண்டும் என விரும்புபவர்கள்... நவ கிரகங்களை வலிமைப்படுத்தவேண்டும் என விரும்புபவர்கள்... பின்வரும் பொருட்களை குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட தருணத்தில் தானமாக வழங்கி வர வேண்டும் என குறிப்பிடுகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய ஓரை தருணத்தில் துல்லியமாக ஒரு கிலோ அளவிற்கு கோதுமையையும், திங்கட்கிழமைகளில் முனை உடையாத சுத்தமான தரமான இரண்டு கிலோ பச்சரிசியை இரண்டு லீற்றர் வாட்டர் போத்தலையும், செவ்வாய்க்கிழமைகளில் துல்லியமாக 900 கிராம் அளவிற்கு சிவப்பு வண்ணத்திலான காய்கறிகள் அல்லது துவரம் பருப்பினையும், அத்துடன் யானைகளுக்கு பிடித்த தீவனங்களை ஒன்பது கிலோ அளவிற்கும், புதன்கிழமைகளில் ஐந்து கிலோ பச்சைபயிறு அல்லது ஐந்து கட்டு கீரையையும், வியாழக்கிழமைகளில் வெல்லம்+ சர்க்கரை பொங்கலையும், வெள்ளிக்கிழமைகளில் ஆறு நபர்களுக்கு ஆறு என்ற எண்ணிக்கையிலான ரசகுல்லா எனும் இனிப்பு அல்லது ஆறு நபர்களுக்கு வெண் பொங்கலையும்,சனிக்கிழமைகளில் கத்திரிக்காய் கூட்டு மற்றும் புளியோதரையை எட்டு நபர்களுக்கும், அத்துடன் எட்டு நபர்களுக்கு உளுந்து வடையினையும் தானமாக வழங்க வேண்டும்.
மேற்கண்ட நாட்களில் குறிப்பிட்ட பொருளை தானமாக வழங்கி வரும்போது உங்களுக்கான வெற்றி உறுதியாகி மகிழ்ச்சி அடைவீர்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM