கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம், வானிலிருந்து பூமழை பொழிய, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ஆரோகரா கோசத்துடன் இன்று புதன்கிழமை (2) நடைபெற்றது.
இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே கொண்ட ஆலயம் என பல்வேறு சிறப்புகளை கொண்ட மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக கிரியைகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமானது.

கடந்த 27ஆம் திகதி அடியார்கள் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகி, நேற்று செவ்வாய்க்கிழமை (1) காலை வரை நடைபெற்றது.
அதனையடுத்து, இன்று காலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமானது.
இதன்போது பிரதான கும்பத்திற்கு விசேட யாகம் மற்றும் விசேட அலங்கார, வேதபாராயணம், நாட்டியாஞ்சலி நடைபெற்றதை தொடர்ந்து, பிரதான கும்பங்கள் உட்பட அனைத்து கும்பங்களும் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு இராஜகோபுரம் மற்றும் ஆலயத்தின் கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு கும்பாபிசேகம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு சுயம்புலிங்கமாக மூலமூர்த்தியாக உள்ள மாமாங்கேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இன்றைய கும்பாபிஷேகத்தை கண்டுகளிக்க இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் சென்றிருந்தனர்.
இதன்போது அடியார்கள் தாகசாந்தி மற்றும் அன்னதானத்தில் கலந்துகொண்டனர்.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM