தன்சானியாவிலுள்ள “ கடவுள் மலை” யில் பாரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான வெடிப்புக்கள் தவிர்க்க முடியாதவை எனவும் இது மனித வரலாற்றின் முக்கிய தடயங்களை மறைத்துவிடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக  விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

7650 அடி உயரமுடைய கடவுளின் மலை எனப்படும் எரிமலையானது 3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மூதாதையர்கள் காலூன்றிய இடத்திலிருந்து 70 மைல்களுக்கு அப்பால் உள்ளது.

இங்கு 400 மனித கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இம் மலையில் எந்தவொரு நேரத்திலும் இரண்டாவது வெடிப்பு ஏற்படலாம் என்றும் இவ்வாறு இராண்டாம் முறையாக வெடிப்பு ஏற்படும் பட்சத்தில் விலைமதிப்பற்ற தடயங்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.