பசறை நகரில் பல இடங்களில் வீதி ஓரங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் எந்தவித சுகாதார பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாமல் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பேருந்து நிலையத்திலிருந்து முன்னாள் பதுளை செல்லும் பேருந்து நிறுத்தம் இடத்துக்கு அருகாமையில் உள்ள நடைபாதைகளில் தரையில் வைத்து காய்கறிகள் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் சில நேரங்களில் பேருந்துகளுக்குள் இருப்பவர்கள் துப்பும் எச்சில் கூட இந்த காய்கறிகள் மற்றும் பழங்களில் படுகின்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நடந்து செல்லும் மக்களும் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகுதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விடயம் தொடர்பாகசம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
பாடசாலை மாணவர்களும் பழங்களை அந்த இடங்களில் இருந்து வாங்கி கழுவாமல் சாப்பிடுவதால் பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இது தொடர்பாக ஆராய்ந்து, சுகாதார பாதுகாப்பு முறையின் கீழ் இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM