களுத்துறை விகாரைக்கு அருகில் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மருதானையிலிருந்து காலி நோக்கிப் புறப்பட்ட ரயிலிலே குறித்த பெண் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்துகொண்ட பெண் தெற்கு களுத்துறையைச்சேர்ந்தவர் எனவும் இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெற்கு களுத்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.