கரித்தாஸ் ஸ்ரீலங்கா செடெக் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மற்றும் முன்னாள் தலைவர்களான ஆயர்களை வரவேற்கும் மற்றும் பிரியாவிடை நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (27) கொழும்பிலுள்ள கரித்தாஸ் ஸ்ரீலங்கா செடெக் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அத்துடன் கரித்தாஸ் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மிக பிரமாண்டமான குளிருட்டப்பட்ட கேட்போர் கூட திறப்பு விழாவும் அன்றையதினம் இடம்பெற்றது.
கடந்த 6 ஆண்டுகளாக கரித்தாஸ் ஸ்ரீலங்கா செடெக் நிறுவனத்தின் தலைவராக யாழ் ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையும் பிரதி தலைவராக கொழும்பு மறைமாவட்ட உதவி ஆயர் அதிவணக்கத்துக்குரிய மக்ஸ்வெல் சில்வா ஆண்டகையும் கடமையாற்றினர்.
இந்நிகழ்வில், அவர்களின் பதவிக்காலம் நிறைவுற்று பிரியாவிடை இடம்பெற்ற அதேவேளை இந்நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அதிவணக்கத்துக்குரிய ஹெரல்ட் அந்தனி பெரேரா ஆண்டகைக்கான வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கரித்தாஸ் ஸ்ரீலங்கா செடெக் நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் அருட்தந்தை லூக் நெல்சன் அடிகளாரும், 13 மறைமாவட்ட நடுநிலையங்களின் பணிப்பாளர்களும், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், சிவில் சமூக அமைப்பினர் கரித்தாஸ் நிறுவனத்தின் ஊழியர்களும் கலந்துக்கொண்டார்கள்.
கரித்தாஸ் ஸ்ரீலங்கா செடெக் நிறுவனமானது இலங்கையில் உள்ள கத்தோலிக்க ஆயர் பேரவையின் மேற்பார்வையின் கீழ் அவர்களின் வழிகாட்டலின் பேரில் இயங்குகின்ற நீதி சமாதானம் மற்றும் மனித அபிவிருத்திக்கான கத்தோலிக்க தேசிய இயக்கத்தின் சமூக கரமாகும்.
ஆணைக்குழுவின் தேசிய செயலகமாக இந்த நிறுவனம் அமைவதோடு 13 மறைமாவட்டங்களிலுமுள்ள ஆயர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும் மறைமாவட்ட நடுநிலையங்களின் ஆதரவோடும் இயங்கி வருகின்றது. இந்நிறுவனமானது சர்வதேச கரித்தாஸ் அமைப்பின் அங்கத்தினராக திகழ்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM