இலங்கையின் முன்னணி வங்கித்துறைப் பிரமுகர்களில் ஒருவரான டெல்வின் பெரெய்ரா 2025/26 ஆண்டுக்கான Rotary ஸ்ரீலங்கா மற்றும் மாலைத்தீவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்கி மற்றும் நிதி சேவைத்துறையில் 37 வருட அனுபவம் கொண்ட ஒரு சிறப்பான கம்பனி வல்லுநராக, அவர் எந்த எதிர்ப்பும் இல்லாமல் rotary அமைப்பை வழிநடத்த நியமிக்கப்பட்டார். சேவை, பார்வை மற்றும் நற்பண்பு ஆகியவை rotary சமூகத்தை அவரை உலகளவில் மிகவும் மதிக்கப்படும் சேவை அமைப்பின் உச்ச பதவிக்கு தேர்வு செய்ய வழிவகுத்தன.
வங்கி தொழிலில் தன் பயணத்தை Commercial Bankல் தொடங்கிய டெல்வின், பின்னர் Seylan Bank-இன் துணை பொது மேலாளராகவும், தற்பொழுது Amana Bank-இல் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். Trade Finance, SME Lending, Retail Banking மற்றும் Risk Management ஆகிய துறைகளில் அவர் விசால அனுபவம் பெற்றுள்ளார்.
St. Sylvester’s College, Kandyல் கல்வி கற்ற அவர், Certified Management Accountant (Australia) மற்றும் University of Western Sydney-இல் MBA பட்டமும் பெற்றுள்ளார். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட பயிற்சி, குறிப்பாக SME துறையில் அவரின் நிபுணத்துவத்தை மேம்படுத்தியுள்ளது.
Rotary பயணத்தில், அவர் தொடக்கத்தில் Rotaract Club of Kandy-இன் உறுப்பினராகச் சேர்ந்தார். பின்னர் Rotary Club of Matale மற்றும் Rotary Club of Moratuwa-விலும் சிறப்பாக பணியாற்றினார்.
அவர் Club President, Secretary மற்றும் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். Vocational Service, Community Service, Club Administration மற்றும் Rotary Foundation போன்ற குழுக்களில் தலைமை வகித்துள்ளார். மாவட்ட அளவில் PRTS, District Conference மற்றும் District Interact Chair ஆகியவற்றுக்கும் தலைமை தாங்கியுள்ளார்.
Assistant Governorஆக இரண்டு தடவைகள் பணியாற்றியுள்ளார். அவரது சிறந்த சேவையை rotary அமைப்பு பெரிதும் பாராட்டியுள்ளது.
அவரின் மனைவி Rtn. லூசில் பெரெய்ரா ஒரு முன்னாள் வங்கியாளர் மற்றும் இசை பயிற்சியாளர். அவர்களுக்கு மெலிசா, லொசைன் என இரு பிள்ளைகள். மெலிசா Chartered Marketer மற்றும் பியானோ கலைஞர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் நிதியில் பட்டம் பெற்றவர். லொசைன் UKஇல் உள்ள University of Westminsterஇல் நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் மற்றும் Film Productionஇல் Master's பட்டம் பெற்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM