மட்டக்களப்பு வாரைப் பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

வாரை புளியம்கந்தலடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதுடைய கந்தையா விக்கினேஸ்வரன் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் சம்பவதினம் இரவு 12 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்கதவை தட்டுவதை கோட்டு கதவை குறித்த நபர் திறந்தபோது அவர் மீது  இனந்தெரியாத நபரொருவர் கத்துக்குத்து தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து கத்திக்குத்தில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வாகரைப் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்