மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம்  இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் நேற்று புகையிரதத்திலிருந்து விழுந்திருக்கலாமென  சந்தேகிப்பதாக மாங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.