பம்பலப்பிட்டி ஸ்ரீ பழைய கதிரேஷன் கோவில் வருஷாபிஷேக கும்பாபிஷேக உற்சவ அலங்காரத் திருவிழா நேற்று திங்கட்கிழமை (30) தொடங்கியது முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
நேற்றைய தினம் திங்கட்கிழமை (30) கணபதி ஹோமம் நடைபெற்று அபிஷேகம் விஷேட பூஜை தீபாராதனையுடன் சுவாமி உள் வீதி வலம் வந்து ஆலய முன்றலில் அலங்கார கொடி உற்சவம் நடைபெற்று, வெளி வீதி உலா நடைபெற்றது.
எதிர்வரும் வியாழக்கிழமை (10) வரை தினமும் காலை 6 மணிக்கு விநாயகப் பெருமானுக்கு ஸ்நபன அபிஷேகம் விஷேட பூஜை தீபாராதனை நடைபெறவுள்ளதோடு, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூசையுடன் விஷேட வசந்த மண்டப அலங்கார பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதி வெளி வீதி உலா நடைபெறும்.
எதிர்வரும் திங்கட்கிழமை (07) வருஷாபிஷேக தினத்தை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு விநாயக பெருமானுக்கு அஷ்டோத்திர 108 சங்காபிஷேகமும் சிவன், அம்மன், வள்ளி, தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் ஸ்நபன ஏக கும்ப அபிஷேகம், பூஜை நடைபெறும்.
எதிர்வரும் புதன்கிழமை (09) மாலை 6.30 மணிக்கு விஷேட பூஜை தீபாராதனை நடைபெறவுள்ளதோடு, சப்பறத் திருவிழா நடைபெறும்.
எதிர்வரும் வியாழக்கிழமை (10) காலை 8 மணிக்கு விஷேட வசந்த மண்டப பூஜை தீபாராதனை நடைபெற்று சர்வாலங்கார பூமிதராக விநாயகப்பெருமான் உள் வீதி இரநாரோஷணம் (தேர் திருவிழா) நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM