கடந்த ஏழு ஆண்­டு­களில் இலங்­கையில் இருந்த டெங்கு நுளம்பு வகைக்கு அப்பால் புதிய வகை­யி­லான நுளம்பு பரவல் ஆரம்­பித்­துள்­ளது. புதிய வகை­யி­லான வைரஸ் நோயை கொண்­டு­வந்து தாக்­கத்தை மோச­மா­ன­தாக மாற்றி வரு­கின்­றது என சுகா­தார பணிப்­பகம் தெரி­வித்­துள்­ளது. 

நாட­ளா­விய ரீதியில் டெங்கு காய்ச்சல் பரவல் அதி­க­ரித்து வரு­கின்­றது. கடந்த நான்கு ஆண்­டு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இந்த ஆண்டில் டெங்கு பரவல் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த ஏழு மாத காலத்தில் சரா­ச­ரி­யாக 90 ஆயிரம் டெங்கு நோயா­ளர்கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­துடன் 269 பேர் காய்ச்சல் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இலங்­கையில் மாத்­திரம் இல்­லாது பல்­வேறு நாடு­களில் டெங்கு நோய் பரவல் அதி­க­ரித்து வரு­கின்­ற­தாக உலக சுகா­தார ஸ்தாபனம் தெரி­வித்­துள்­ளது. வியட்நாம், மலே­சியா, இந்­தியா, பாகிஸ்தான் ஆகிய நாடு­க­ளிலும் மிகவும் வேக­மாக டெங்கு நோய் பரவி வரு­கின்­றது. இலங்­கை­யிலும் அதே போன்­ற­தொரு மோச­மான நிலை­மையே காணப்­பட்டு வரு­கின்­றது.

இலங்­கையில் கடந்த ஏழு மாதங்­களில் மொத்­த­மாக நாட­ளா­விய ரீதியில் 89 ஆயி­ரத்து 885 பேர் டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இது­வ­ரையில் 269 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மாகாண ரீதியில் பார்க்­கையில் மேல் மாகா­ணத்தில் 37ஆயி­ரத்து 981 பேர் டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 136 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 

தென் மாகா­ணத்தில் 8 ஆயி­ரத்து 141 பேர் காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 29 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். வட மாகா­ணத்தில்  4ஆயி­ரத்து 499 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 3 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். கிழக்கு மாகா­ணத்தில் 10 ஆயி­ரத்து 709 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 24  பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். சப்­ர­க­முவ மாகா­ணத்தில் 9 ஆயி­ரத்து 688 பேர் காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 27 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 

வடமேல் மாகா­ணத்தில் 7 ஆயி­ரத்து 980 பேர் காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 16 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மத்­திய மாகா­ணத்தில் 6 ஆயி­ரத்து 194 பேர் காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 20 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். ஊவா மாகா­ணத்தில் 2 ஆயி­ரத்து 512 பேர் டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 6 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். வட­மத்­திய மாகா­ணத்தில் 2 ஆயி­ரத்து 181 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 8 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 

மரண வீத­மா­னது நோயாளர் எண்­ணிக்­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் 0.3 வீத­மாக உள்­ளது. இதில் 15 வயது தொடக்கம் 45 வயது வரை­யி­லானோர் 50 வீத இறப்பை கொண்­டுள்­ளனர். 45 வய­திற்கு மேற்­பட்­ட­வ­ர்­களின் இறப்பு வீத­மா­னது 35 வீதத்தை கொண்­டுள்­ளது. அதேபோல் 15 வய­திற்கு குறைந்த வய­தினர் 15 வீத­மானோர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 

நுளம்பு தாக்­க­மா­னது  5 வயது தொடக்கம் 18 வயது வரை­யி­லா­ன­வர்கள் டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­படும் வீத­மா­னது  30 வீத­மாக உள்­ளது. கடந்த நான்கு ஆண்­டு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சல் பர­வலும் உயி­ரி­ழப்பு வீதமும் உய­ரிய மட்த்தில் உள்­ளது. கடந்த இரண்டு ஆண்­டு­களில் டெங்கு காய்ச்­ச­லினால் உயி­ரி­ழந்தோர் எண்­ணிக்கை 154 பேர் ஆகும். குறிப்­பாக இந்த ஆண்டில் தொடர்ச்­சி­யாக நில­விய சீரற்ற கால­நிலை மற்றும் அதி­க­ள­வி­லான அனர்த்­தங்­களும் குப்பை பிரச்­சி­னையும் டெங்கு தொற்று அதி­க­ரிக்க முக்­கிய கார­ணி­யாக அமைந்­துள்­ளது. 

கடந்த ஏழு ஆண்­டு­களில் இலங்­கையில் இருந்த டெங்கு நுளம்பு வகைக்கு அப்பால் புதிய வகை­யி­லான நுளம்பு பரவல் ஆரம்­பித்­துள்­ளது. புதிய வகை­யி­லான வைரஸ் நோயை கொண்­டு­வந்து தாக்­கத்தை மோச­மா­ன­தாக மாற்றி வரு­கின்­றது. இந்த வகை நுளம்­பு­க­ளா­னது சிங்­கப்பூர் நாட்டில் மாத்­திரம் இது­வரை காலம் காணப்­பட்­டது. 

ஏழு ஆண்­டு­க­ளுக்கு பின்னர் இலங்­கையில் இந்த வர்க்க நுளம்­புகள் பரவி வரு­கின்­றது. இலங்­கையில் இது­வரை நான்கு நோய் தாக்­கத்தை உரு­வாக்கும் இரண்டு வகை­யி­லான டெங்கு நுளம்­புகள் உள்­ளன. ஆரம்­பத்தில் முதலாம் மற்றும் நான்காம் வர்க்க நுளம்­பு­களின் தாக்­கமே அதி­க­மாக காணப்­பட்­டது. இது தாக்கம் குறை­வா­ன­தாகும். 

எனினும் இப்­போது பர­வி­வரும் டெங்கு காய்ச்­ச­லா­னது இரண்டாம் வர்க்­கத்தை கொண்­ட­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இவை பிர­தே­சத்தில் அனைத்து அசுத்­த­மான பகு­தி­க­ளிலும் முட்டை இடக்­கூ­டிய தன்­மையை கொண்­டுள்­ளது. 

மேலும் ஆரம்­பத்தில் டெங்கு நோயை கண்­ட­றிய இல­கு­வான அறி­கு­றிகள் இருந்­தது. அதா­வது தொடர்ச்­சி­யான காய்ச்சல், உடலில் தழும்­புகள், இருமல், கண்­வலி ஆகி­யவை காணப்­படும். எனினும் இப்­போது இரண்டாம் வர்க்க நுளம்­பு­களின் தாக்கம் பெரிய அள­வி­லான அறி­கு­றி­களை வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை. 

இது உடல் வலியை வெளிப்­ப­டுத்தும் எனினும் தழும்­பு­களை காட்­டவோ ஏனைய அறி­கு­றி­களை வெளிப்­ப­டுத்­து­வதோ மிகக் குறை­வா­ன­தாகும். பத்­தா­யிரம் பேர் டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்தாலும் அதில் ஆயிரம் பேருக்கே அறி­கு­றிகள் வெளிப்­ப­டுத்­தப்­படும். அதிலும் குறைந்த நோயாளர்களுக்கே சரியான வெளிப்பாடு காட் டப்படும். 

ஆகவே சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலும் அனைவரும் இரத்த பரிசோதனை செய்யவேண்டும். அதேபோல் பொதுமக்கள் அனைவரும் தத்தமது சூழலை சுத்தம் செய்து நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.  வீட்டு சூழல் மாத்திரம் இன்றி பாடசாலை, காணிகள், கைவிடப்பட்ட காணிகள் என சகல பகுதிகளையும் மக்கள் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும் என சுகாதார பணிப்பகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.