நாட்டின் பொலிஸாரின் அடாவடித்தனம் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே உள்ளதாக சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

ஊழல் மோசடிகள் குறித்தான விசாரணைகளில் எமக்கு போதியளவு திருப்தியில்லை எனவும் பொலிஸாரின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு விசேட சுயாதீன நிறுவனமொன்றை உருவாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் வலியுறுத்த உள்ளதாக இராஜங்க அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எம் மின்ஹாஜ்)