கல்முனை வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு ; பொதுமக்கள் விசனம்

01 Jul, 2025 | 11:25 AM
image

அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் தினமும் நடமாடுவதால் பொதுப் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.   

அந்த பகுதியில் பகல் இரவு முழுவதும் ஆக்கிரமித்துள்ள கட்டாக்காலி மாடுகள் தினமும் பொதுப் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில் நடமாடி வருகின்றன.

அப்பகுதியில் உள்ள அரச, தனியார் நிறுவனங்களுக்கு முன்பாக தினமும் மாடுகள் நடமாடுவதால், அப்பகுதிகள் சுகாதார சீர்கேடான இடங்களாக மாற்றமடைந்ததோடு, அவ்விடமெங்கும் துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. 

மேலும், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம், கல்முனை மாநகர சபை, கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை, கல்முனை பிரதான பேருந்து தரிப்பிடம், இலங்கை மின்சார சபை, கல்முனை பிரதேச செயலகம், வங்கிகள் உட்பட பல பகுதிகளில், இரவு வேளைகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. 

மாடுகளினால் ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சலால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் வகையில் கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபை மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோதிலும் தற்போது இந்த விடயத்தில் கவனம் செலுத்தாதுள்ள நிலை காணப்படுகிறது.

இதனால் பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் மாடுகள் படுத்துறங்குவது, நிற்பது பொதுமக்கள், வாகன சாரதிகளுக்கு பல சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதி போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுகின்ற கட்டாக்காலி மாடுகளை கல்முனை மாநகர சபை அதிகாரங்களைக் கொண்டு, ஏன் மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மாநகர சபையினால் கடந்த காலங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை பொலிஸாருடன் இணைந்து பிடித்ததைப் போன்று, எதிர்காலத்திலும் நடமாடித் திரியும் மாடுகளைப் பிடித்து, அன்றாடம் ஏற்படுகின்ற வீதி விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னர் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் மாநகர பகுதியில்  போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டாக்காலி மாடுகள் கடந்த காலங்களில் பிடிக்கப்பட்டு தண்டம் அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பஸ் நிறுத்தங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள்...

2026-08-15 09:10:14
news-image

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி...

2026-08-15 08:49:44
news-image

இன்றைய வானிலை 

2026-08-15 06:17:08
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு...

2026-08-15 06:12:02
news-image

மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் உருவான அரசாங்கம்...

2026-08-15 06:01:04
news-image

வங்கி அதிகாரிகள், பொலிஸார் என நடித்து...

2026-08-15 05:57:44
news-image

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20ம் ஆண்டு...

2026-08-15 05:55:09
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா...

2026-08-15 05:47:55
news-image

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிய பலரது...

2026-08-15 05:08:29
news-image

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில்...

2026-08-14 12:44:36
news-image

நீதித்துறையை அரசியலாக்க வேண்டாம் ; தைரியமிருந்தால்...

2026-08-14 16:54:24
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வெளிநாடுகள்...

2026-08-14 14:28:23