(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
இலங்கை மின்சார சபை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள விடயங்களை விரிவாக ஆராய வேண்டும். மின்சார சபையின் உரித்தை நூற்றுக்கு நூறு சதவீதம் அரசிடம் வைத்துக் கொள்வது எந்தளவுக்கு பொருத்தமானதாக அமையும் என்று கேள்வியெழுப்பியுள்ள சர்வதேச நிதி நிறுவனங்கள் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களினால் எதிர்பார்க்கும் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளன. இவ்விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற அரச நிதி மூலோபாய கூற்று வெளிப்படுத்தல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்க்கொண்ட சந்தர்ப்பத்தில் தான் நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தன பதவியேற்றார்.
பொருளாதார ஸ்திரப்படுத்தலை தொடர்ந்து அவர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றுள்ளார். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவைக்கு கௌரவமளிக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட நாடுகள் ஏதும் முன்னேற்றமடையவில்லை. கடனை செலுத்தாமல்,பொருளாதாரத்தை முன்னேற்றுவோம் என்று குறிப்பிட்ட தேசிய மக்கள் சக்தி நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.
முன்வைக்கப்பட்ட நடைமுறைக்கு சாத்தியமற்ற குற்றச்சாட்டுக்களை கருத்திற் கொள்ளாமல் மஹிந்த சிறிவர்தன தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளார்.
அரச நிதி மூலோபாய கூற்று வெளியிடப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உயர்வடைந்தது.
இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதத்தால் குறைவடையும் என்றும், 2026 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக உயர்வடையும் என்று குறிப்பிடப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரை பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக உயர்வடையும் என்று குறிப்பிடப்படுகிறது. 3.1 சதவீத வளர்ச்சி ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
இலக்கிடப்பட்ட அபிவிருத்தியை அடைய வேண்டுமாயின் பொருளாதார வளர்ச்சி வருடாந்தம் குறைந்தப்பட்சம் 8 சதவீதமாக பதியப்பட வேண்டும்.
இலங்கை மின்சாரசபை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
சட்டமூலத்தில் பல ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணா அல்லது முரணற்றதா என்பதை மாத்திரமே உயர்நீதிமன்றம் ஆராயும். கொள்கை மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான முரண்பாடுகளை அரசாங்கமே ஆராய வேண்டும்.
இலங்கை மின்சாரசபை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள விடயங்களை விரிவாக ஆராய வேண்டும். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் ஜெய்கா ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து வலுசக்தி அமைச்சுக்கு கூட்டு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
மின்சார சபையின் உரித்தை நூற்றுக்கு நூறு சதவீதம் அரசிடம் வைத்துக் கொள்வது எந்தளவுக்கு பொருத்தமானதாக அமையும் என்று கேள்வியெழுப்பியுள்ளது.
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களினால் எதிர்பார்க்கும் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாக இந்நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. ஆகவே இவ்விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM