தேசிய மக்கள் சக்தி அரசியல் விலைமாதுவாகியுள்ளது - ஐக்கிய மக்கள் சக்தி கடும் விசனம்

30 Jun, 2025 | 05:40 PM
image

(எம்.மனோசித்ரா)

அதிகாரத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் தேசிய மக்கள் சக்தி இன்று அரசியல் விலைமாதுவாகியுள்ளது. அதிகாரத்துக்காக அனைத்தையும் காட்டிக் கொடுக்கும் நிலைப்பாட்டையே இந்த அரசாங்கம் பின்பற்றுகின்றது. இந்த அரசாங்கம் குண்டர் கும்பலை உள்ளுராட்சிசபைகளுக்கு அனுப்பி அராஜகத்திலும் ஈடுபடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் மீறியுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலில் கூறத்தொடங்கிய பொய்களை உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வரையும் தொடர்ந்து அவற்றின் மூலம் மக்களை ஏமாற்றியிருக்கின்றனர். தேசிய மக்கள் சக்தியின் என்ற கட்சி அரசியல் விலைமாதுவாகியுள்ளது. 

அதிகாரத்துக்காக அனைத்தையும் காட்டிக் கொடுக்கும் நிலைப்பாட்டையே இந்த அரசாங்கம் பின்பற்றுகின்றது.

அன்று தொண்டமான் ஊழல்வாதியென்று கடுமையாக விமர்சித்தனர். ஆனால் நுவரெலியாவில் ஆட்சியமைப்பதற்கு தொண்டமான் குழுவின் ஆதரவைப் பெற்றுக் கொண்டனர். 

அதேபோன்று தான் தெற்கு மற்றும் கிழக்கில் ரிஷாத் பதியுதீன் மற்றும் பொதுஜன பெரமுனவின் ஆதரவையும் பெற்றுக் கொண்டுள்ளனர். 

இவற்றுக்கு அப்பால் ஒரு படி மேல் சென்று குண்டர்களை அனுப்பி அராஜகத்திலும் ஈடுபடுகின்றனர். பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்பதாகக் கூறினர். ஆனால் இன்று பாதாள உலகக் குழு அரசாங்கத்துக்கு உதவுகிறது.

இவ்வாறு அதிகாரத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாலேயே தேசிய மக்கள் சக்தியை அரசியல் விலைமாது என்கின்றோம்.

 சபை உறுப்பினர்களைத் தவிர அவற்றுக்குள் பிரவேசிப்பதற்கு வேறு யாருக்கு அதிகாரமிருக்கிறது? ஊடகங்களுக்கு கூட அனுமதி மறுக்கப்படும் இடங்களில் தேசிய மக்கள் சக்தியின் குண்டர் கும்பல் நுழைந்து அராஜகமாக செயற்படுகிறது. 

முடிந்தால் இவர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு சவால் விடுக்கின்றோம்.

அவர்களால் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்பட்டிருக்கின்றனர்.

1988, 1989களில் காணப்பட்ட வன்முறை கலாசாரத்தையே தற்போதும் பின்பற்ற முயற்சிக்கின்றனர். வன்முறை கலாசாரம் என்பது ஜே.வி.பி.யின் மரபணுவில் ஊறிய ஒன்றாகும். 

எனவே ஜே.வி.பி.யையும் வன்முறையையும் பிரிக்க முடியாது. வெலிகம பிரதேசசபைக்குள் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்ட குண்டர் கும்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதையே எதிர்பார்த்திருக்கின்றோம். 

அதிகாரத்துக்காக இவ்வாறு கீழ்தரமாக செயற்பட வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55
news-image

பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே...

2026-05-16 12:36:54
news-image

பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4...

2026-05-16 12:04:14
news-image

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு...

2026-05-16 11:35:00
news-image

உலக செஸ் சம்மேளன தலைவர் இலங்கைக்கு...

2026-05-16 11:30:35
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை...

2026-05-16 11:08:52
news-image

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல்...

2026-05-16 11:14:55
news-image

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞனின் சடலம்!

2026-05-16 10:38:47
news-image

நாட்டின் இரு வேறு பகுதிகளில் விபத்துக்கள்...

2026-05-16 12:16:58