கொழும்பு மேற்கு தொகுதியிலுள்ள கொட்டாஞ்சேனை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமாரின் ஏற்பாட்டில் கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக பொறுப்பேற்றுள்ள விராய் கெலி பல்சதார் மற்றும் பிரதி மாநகர சபை முதல்வர் ஹேமந்த குமார உட்பட ஏனைய முக்கிய உறுப்பினர்கள் மற்றும் குழுவினர்களின் பங்களிப்பில் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், புதிய மாநகர சபை முதல்வராக பொறுப்பேற்றமைக்காக அவருக்கு இறை ஆசி வேண்டியதுடன் அவருக்கும் பிரதி மாநகர சபை முதல்வர் ஹேமந்த குமார மற்றும் மாநகர சபை உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் ஆகியோருக்கு ஆலய நிர்வாகத்தினரால் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, நினைவுக்கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொழும்பு மாநகர சபை முதல்வர் விராய் கெலி பல்தசார் - இந்த ஆலயமும் ஆலய நிர்வாகமும், விசேடமாக இந்த கொட்டாஞ்சனை வாழ் தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் எம்மை இங்கு வரவேற்றனர்.
பல்வேறு தனித்துவத்தை தன்னகத்தே கொண்ட நகரம் இந்த கொழும்பு மாநகரமாகும் இந்தத் தனித்துவத்தையும் இதன் மதிப்பையும் எமது நகர சபையும் எமது தலைமைத்துவமும் மதிப்பளிக்கின்றன. ஆகவே இந்த 'அன்பிற்கு நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாகவே இருப்போம்' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM