bestweb

யாழ். பல்கலை சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு 20 ஆண்டுகள் பூர்த்தி - ஆவணப்படம் வெளியீடு

30 Jun, 2025 | 11:55 AM
image

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்கலைக்கழக சட்டத்துறையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (29) விசேட நிகழ்வொன்று நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸும் கௌரவ விருந்தினராக சட்டத்தரணி மாலா சபாரத்தினமும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை தொடர்பான ஆவணப்படமொன்று வெளியிடப்பட்டது.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி நிஸாந்தவின் நெறியாள்கையில் நடைபெற்ற குழு விவாதத்தில் இலங்கை சட்டக் கல்லூரி அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்தலால் டி அல்வீஸ், சட்டத்தரணி எல்.இளங்கோவன், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி எர்மிசா டெகல், சட்டத்தரணி லக்ஸ்மனன் ஜெயகுமார் ஆகியோர் நேரடியாக பங்கேற்றதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய இணைய வழியில் இணைந்தார்.

இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் உட்பட நீதிபதிகள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சட்டத்துறை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் விக்கி நவரட்ணத்தின் இரு நூல்களின்...

2025-07-13 16:31:15
news-image

கொழும்பு காக்கைதீவு கடற்கரையில் பட்டத்திருவிழா

2025-07-12 18:25:02
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-07-12 18:14:03
news-image

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர்...

2025-07-12 12:17:32
news-image

யாழ் பல்கலைக்கழக சட்ட இதழ் "நீதம்"...

2025-07-12 12:58:15
news-image

35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த...

2025-07-11 13:16:52
news-image

உலக சரக்கு விமான விருதுகள் -...

2025-07-11 16:01:13
news-image

14 வது வருடமாகவும் தரம் 05...

2025-07-10 15:59:59
news-image

7 ஆவது தடவையாக இடம்பெறவுள்ள  Bocuse...

2025-07-11 12:26:25
news-image

சண்முகதாசன் நுற்றாண்டு மனப்பதிவுகள் : நினைவுப்...

2025-07-09 19:21:32
news-image

தரம் 5 புலமைப்பரிசில் முன்னோடி பரீட்சை...

2025-07-09 19:05:19
news-image

மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தில்...

2025-07-09 18:26:04