மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் அறநெறிக் கல்வி விழிப்புணர்வு ஆன்மிக எழுச்சி ஊர்வலமும் வாழைச்சேனை பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் அறநெறி பாடசாலையின் அதிபர் சதாசிவம் கார்த்தீபன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது.
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசனை வழிகாட்டலுக்கு அமைவாக கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறி பாடசாலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பேத்தாழை வாழைச்சேனை ஸ்ரீ விரையடி விநாயகர் அறநெறிப்பாடசாலையும் ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயமும் நலன் விரும்பிகளும் இணைந்து நடாத்தியிருந்தன.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் மாணிக்கவாசகரின் திருவுருவப் படம் தாங்கிய ஆன்மிக எழுச்சி ஊர்வல நிகழ்வு வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி கல்குடா பிரதான வீதி வழியாக ஊர்வலமாக கலாச்சார மண்டபத்தை சென்றடைந்து குருபூசை நிகழ்வு நடைபெற்றது.
நந்திக் கொடியேற்றல், கொடிக்கவி இசைத்தல், அறநெறிக் கீதம் இசைத்தல், மங்கள விளக்கேற்றல், இறைவழிபாடு, இறை இசை, ஆசியுரை, என்பனவற்றுடன் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் என்பன அரங்கில் இடம்பெற்றது.
இறுதி நிகழ்வில் அறநெறி போட்டி நிகழ்சிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் பிரதம அதிதியாக இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், மட்டக்களப்பு ஆனந்த கிரி அறப்பணி சபை தலைவர் லோ.தீபாகரன், சமூகசேவையாளர் வில்சன் சுதாகர் ஆகியோர்கள் அறப்பணி சமூகத்தினால் பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM