பேராதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கண்டி பிரதான வீதியின் பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்நிலையில், மோட்டார்  சைக்கிளில் பயணித்தவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். குறித்த விபத்தானது இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து கம்பளை நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் தெரிவித்தார்.