bestweb

சிங்கை வாழ் தமிழ் குடும்பத்தின் 3 தலைமுறையினரின் பங்களிப்பு : ‘சமூகசேவை’, ‘மருத்துவத்தொண்டு’, ‘தமிழ் இசை" யை வளர்த்தல்

29 Jun, 2025 | 07:32 AM
image

சமூகச் சேவை செய்வது சிறப்பு , ஒரு குடும்பம், கடல் கடந்த நாட்டில், மூன்று தலைமுறையாக சமூகச் சேவையைத் தொடர்ந்து செய்து வருவது, மிகச் சிறப்பு.

வயி. சண்முகம் செட்டியார் - தந்தை, டாக்டர் வயி. ச. வயிரவன் - சண்முகம் செட்டியாரின் இரண்டாவது மகன்,  செளந்தர நாயகி வயிரவன் - டாக்டர்  வயி.ச. வயிரவனின் மருமகள். இந்த மூவர் தான் மூன்று தலைமுறையினர். இம்மூன்று தலைமுறையினரும் சிங்கப்பூர் தமிழ் சமூகத்திற்காக ஆற்றிய அறப்பணிகளை பற்றி பார்த்தால், 

வயி. சண்முகம் செட்டியார் (1913–1987)

கடந்த 1913-ஆம் ஆண்டு செட்டிநாட்டில் பிறந்தவர் வயி.சண்முகம் செட்டியார். 1920-ஆம் ஆண்டு ‘கைபழக’ இவரின் தந்தை பெரி.வயிரவன் செட்டியாருடன் சிங்கை சென்றார்.

சிங்கப்பூர் தமிழர்களால் என்றும் மறக்க முடியாத ஆளுமையாகத் திகழும் தமிழவேள் கோ. சாரங்கபாணிக்கு உறுதுணையாக நின்று தோள்கொடுத்தவர் வயி.சன்முகம் செட்டியார்.

அறப்பணிச் செல்வர், அருள்நெறிச் செல்வர் என்றும் அறியப்பட்டவர். பொதுநலச் செம்மலாக வாழ்ந்த இவரின் பொதுத்தொண்டினை ப்ரிட்டிஷ் அரசு அங்கீகரித்து “அமைதியின் காவலர்” எனும் உயரிய விருதினை அளித்தது.

டாக்டர் வயி. ச. வயிரவன் 

வயி. சண்முகம் செட்டியாரின் மகன், டாக்டர் வயி. ச. வயிரவன், 1941-ஆம் ஆண்டு நாசியாபுரத்தில் பிறந்தவர். டாக்டர் வயி. ச. வயிரவன், சிங்கப்பூரில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியவர்.

 மருத்துவம் ஒரு தொழில் அல்ல — ஒரு சேவை என்பதை தனது வாழ்நாளில் நிரூபித்தவர். அவர் நோயாளிகளுக்கு மருந்து கொடுத்தவர் மட்டுமல்ல, நம்பிக்கையும், பரிவும் அளித்தவர். அதனால் தான் இவருக்கு ‘கைராசிக்காரர்’, ‘மாயழகு மருத்துவர்’ என அன்பான மரியாதைப் பெயர்கள் வந்தன. 

செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்ந்தோடு நில்லாமல், அவ்வழி ஈட்டிய பொருளை ஈத்துவக்கும் இன்பம் அறிந்தவர். சிறந்த சிவபக்தர். அறச்சிந்தனை மிக்கவர். ஆன்மீகப்பணி பல புரித்தவர், புரிந்து வருபவர்.

சௌந்தரநாயகி வயிரவன் 

1972-ஆம் ஆண்டு செட்டி நாட்டில் பிறந்த இவர், 1993-ஆம் ஆண்டு கணிணி சம்மந்தபட்ட நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சிங்கப்பூர் குடியுரிமைவாசியும், வயி. ச. வயிரவனின்  மகனுமான  வயி. வயிரவனை திருமணம் முடித்து சிங்கையில் குடியேறினார். லண்டனிலும், அவுஸ்திரேலியாவிலும் பட்டங்கள் பல பெற்றவர்.

இந்திய வம்சாவழியினருக்காக ‘onlinevoice’, ‘singindia’ எனும் இணைய பத்திரிக்கைகளை தொடங்கியவர். பல முக்கிய பிரமுகர்களை நேர்காணல் செய்து, கருத்து பரிமாற்றத்திற்குப் பாலமாக விளங்கியவர். சிங்கை நகரத்தார் மலரின் ஆசிரியராக மூன்று வருடங்கள் பணியாற்றியவர். புகழ் பெற்ற  அனைத்துலக பத்திரிக்கைகள் பலவற்றில் இவரின் எழுத்து தடம் பதித்துள்ளது.

முக்கிய அமைப்புகளில் செயலவை உறுப்பினராக பொறுப்பேற்றவர். தமிழ் இசையை மீட்டெடுக்கும் பெரும்பணியை சிரமேற்கொண்டிருப்பவர்.

கர்நாடக இசைக்கச்சேரிகள் பலவற்றை நிகழ்த்தியுள்ளார். பாட்டுப் போட்டிகள் பலவற்றில் நடுவராக விளங்கியவர். இவர் தமிழ்மொழி மேலும் இசை மேலும் கொண்ட பற்றினால், கலாமஞ்சரி எனும் நிருவனத்தை நிருவி, அதன் மூலம் தமிழ்இசையை வளர்க்க முயல்பவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்கலையும், இசைக் குறுந்தட்டுகளையும் வெளியிட்டு வருபவர்.

அண்மையில், சிங்கப்பூரின் மணிவிழா, அதாவது அறுபதாம் பிறந்த நாளை முன்னிட்டு, “Little India and the Singapore India Community, Through the Ages” எனும் நூலை, தகவல் களஞ்சியத்தை, வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மகத்தான மருத்துவம் புரிந்த மாமனாருக்கு, இந்தப் புத்தகத்தை மருமகள் சமர்ப்பித்தார்.

மூன்று தலைமுறைகளாக, அவர்கள் சிந்தனையாலும், செயல்களாலும், சமூகத்தைத் தொட்டு வந்துள்ளனர். இது வெறும் குடும்ப வரலாறு அல்ல. 

இது தமிழரின் அடையாளமும், உணர்வுங்கூட இதுபோன்ற வாழ்வும் சேவையும், நம் மனங்களில் நம்பிக்கையாகவும், நம் தலைமுறைகளில் மரபாகவும் தொடரட்டும்.

எழுத்து ; மோகனபிரியா தனசேகரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அன்பையும் ஒருமைப்பாட்டையும் தாங்கி நிற்கிறது கதிரைவேலன்...

2025-07-07 19:19:29
news-image

சிங்கை வாழ் தமிழ் குடும்பத்தின் 3...

2025-06-29 07:32:57
news-image

நிர்த்தனா நடனப்பள்ளியின் “சுவர்ண நிருத்தியா” பொன்விழா...

2025-06-20 22:19:04
news-image

பரதத்தோடு இணைந்த “அனார்கலி!”

2025-06-20 22:27:56
news-image

சீதா எலிய : இலங்கையின் ஆன்மிக...

2025-06-16 12:05:58
news-image

வைகாசி விசாகத்தின் மகத்துவங்கள்....

2025-06-09 09:14:33
news-image

"நாட்டியத்தில் முழுமையான சந்தோஷத்தை உணர்கிறேன்" -...

2025-06-11 17:04:49
news-image

கலையில் சமத்துவமின்மையை ஏன் கொண்டுவர வேண்டும்? ...

2025-05-23 18:56:02
news-image

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, அரசடி ஶ்ரீ...

2025-05-08 13:55:50
news-image

மனம் திறந்தார் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’

2025-04-29 21:17:35
news-image

காண்பியக் காட்சி - கே.கே.எஸ் வீதி...

2025-04-25 21:34:14
news-image

இசையின் காதல் ராணி எஸ். ஜானகியின்...

2025-04-23 13:13:06