சிறிய முதலீட்டு திரைப்படங்களின் நம்பிக்கை நாயகனான நடிகர்கள் விதார்த் - பிரசன்னா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ' சின்னதா ஒரு படம்' எனும் திரைப்படம்- ஆந்தாலஜி பாணியில் உருவாகி இருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ஜானி டிஸோசா .எஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' சின்னதா ஒரு படம்' எனும் திரைப்படத்தில் விதார்த் , பூஜா தேவாரியா, பிரசன்னா, ரோகிணி , லட்சுமி பிரியா சந்திர மௌலி , வெங்கடேஷ் ஹரிநாதன் மற்றும் புதுமுக நடிகர் வாசுதேவன் மற்றும் நட்சத்திரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் பிரபல நடிகர்களான சந்தானம்- குரு . சோமசுந்தரம் - ரோபோ சங்கர் - பால சரவணன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஆர். ஏ. ரத்னகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரிஷ் வெங்கட் - பிரசாந்த்- சச்சிதானந்த் சங்கரநாராயணன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
ஆந்தாலஜி பாணியிலான இந்த திரைப்படத்தை திருச்சித்திரம் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் .எம். திருநாவுக்கரசு தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எம் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''உண்மை சம்பவங்களை தழுவி நான்கு கதைகளாக இப்படம் உருவாகி இருக்கிறது. நான்கு வித்தியாசமான கதை கள பின்னணியில் சுவராசியமான கதாபாத்திரங்களுடன் ஆந்தாலஜி எனப்படும் தொகுப்பு திரைப்படமாக இப்படம் தயாராகி இருக்கிறது. மனித உணர்வுகளை மையப்படுத்திய இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இப்படத்தை ஜூலையில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM