இன்றைய சூழலில் உயர்கல்வி கற்ற மாணவர்கள் தங்களின் திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. சிலருக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நீடிக்க முடிவதில்லை. பல்வேறு சூழல் காரணமாக எம்முடைய இளைய தலைமுறையினர் வேலை வாய்ப்பினை இழக்கிறார்கள்.
வெகு சிலர் மட்டுமே வேலையை தக்க வைத்துக் கொள்வதற்கான உத்தியை தெரிந்து கொண்டு, அதில் வெற்றி பெறுகிறார்கள்.
சிலருக்கு பிடித்த வேலை... பிடித்த நிறுவனம்.. அமைந்தாலும் அதில் அவர்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. சிலர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். அங்கு காரணம் இன்றி திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள்.
இவர்கள் அடுத்த வேலையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். இது போல் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் அனைவருக்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான வழிபாட்டினை முன்மொழிகிறார்கள்
இதற்கு தேவையான பொருட்கள் : கடுகு எண்ணெய்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட கடுகு எண்ணெயை வாங்கி வைத்துக் கொள்ளவும். காலையில் எழுந்ததும் சூர்ய உதயம் தொடங்கும் தருணத்தில் சூரிய பகவானை பார்த்து, 'வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும்' என்ற ஒற்றை கோரிக்கையை சமர்ப்பித்து, சிறிதளவு கடுகு எண்ணெயை பிரார்த்தனை செய்த பிறகு கை வழியாக நிலத்தில் விட வேண்டும்.
இதுபோல் தொடர்ந்து 48 நாட்கள் சூர்ய உதய தருணத்தில் சூரிய வழிபாட்டுடன் கடுகு எண்ணெயை இணைத்து வழிபடும்போது 25 நாட்களுக்கு மேலாக உங்கள் பிரார்த்தனையை தொடரும் தருணத்திலேயே நீங்கள் நினைத்தது போன்ற வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சூழல் உண்டாகும்.
அதனை துல்லியமாக அவதானித்து பாவித்தால்.. வேலை வாய்ப்பு மீண்டும் கிடைக்கும். சிலருக்கு 48 நாட்கள் நிறைவடைந்த உடன் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM