உறுப்பினர்களின் கருத்தை தட்டிக்தழித்த யாழ். முதல்வர் ; தர்ஷானந்த் கண்டனம்

27 Jun, 2025 | 12:48 PM
image

சபையில் மக்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு முற்பட்ட உறுப்பினர்களுக்கு பிரச்சினைகளை கதைப்பதற்கு நேரத்தை வழங்காமல் யாழ். முதல்வர் தட்டிக் கழித்து சென்றதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் தர்ஷானந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மாநகர சபையில் குழுத் தெரிவிற்காக கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்ட கூட்டத்தின் தொடர்ச்சியான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27) யாழ்ப்பாணம் மாநகர சபையில் நடைபெற்றது. இதன் போது குழுக்களை தெரிவு செய்வதற்கு எங்களது சகல ஒத்துழைப்புகளையும் வழங்கி இருந்தோம்.

ஆனாலும் குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் உறுப்பினர்கள் பலரும் எழுந்து தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பத்தை கேட்ட போது, "எதை வேண்டுமானாலும் எழுத்தில் வழங்குங்கள். இந்த கூட்டத்தில் எதுவும் செய்ய முடியாது. அடுத்த கூட்டத்தில் பார்க்கலாம்" எனக் கூறிவிட்டு முதல்வர் சென்றபோது நாங்கள் முதல்வரை வழிமறித்து எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருமாறு கோரினோம்.

ஆனால் இதுவரை எந்த ஒரு முதல்வரும் செய்யாத விடயத்தை இந்த முதல்வர் செய்து இருக்கின்றார். இது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம். நாங்கள் நமது வட்டாரத்தில் வெற்றி பெற்று வந்தவர்கள்.

நமது மக்களின் பிரச்சினையை நாங்கள் தெருவில் இருந்து கதைக்க முடியாது, சபையில் தான் கதைக்க வேண்டும். அவர் வழமைக்கு மாறாக செயற்பட்டிருக்கின்றார். இவ்வாறான செயற்பாடானது தமக்கு மன வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.

இது ஒரு தொங்கு சபை. பெரும்பான்மை சபையை நடத்துவது போல இந்த சபையை நடத்த நினைக்கின்றார்கள். 23 பேர்கள் இருக்க வேண்டிய இடத்தில் அவரது கட்சியில் 13 பேரே உள்ளனர்.

எப்போதும் தாங்கள் பெரும்பான்மையுடன் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் சபையை நடாத்த நினைப்பது நல்லதாக தோன்றவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய மாநாட்டிற்கு தயாராகுங்கள் ; கட்சி...

2026-01-25 17:33:06
news-image

மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன், ஒரு...

2026-01-25 16:59:19
news-image

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக வெகுஜன...

2026-01-25 16:58:45
news-image

விமான நிலையத்தில் குஷ், ஹஷிஷ் போதைப்பொருள்...

2026-01-25 16:57:41
news-image

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க்...

2026-01-25 16:56:25
news-image

அரசியல் தலைவர்கள் தூக்கிபோடு எழும்பு துண்டுகளுக்கு...

2026-01-25 16:56:07
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல்: 06...

2026-01-25 16:55:43
news-image

இயலாமையுடைய நபர்களுக்கான சேவை வழங்கலை மேம்படுத்தல்...

2026-01-25 16:53:18
news-image

முன்பள்ளிக் கல்வி சீர்திருத்தத்திற்கு வரலாற்றுச் சிறப்பான...

2026-01-25 16:33:04
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல் ;...

2026-01-25 16:40:55
news-image

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

2026-01-25 16:52:56
news-image

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு - பொலிஸார்...

2026-01-25 16:34:57