(எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று வியாழக்கிழமை, பெத்தும் நிஸ்ஸன் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம், தினேஷ் சந்திமால் குவித்த அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது.

பங்களாதேஷை முதல் இன்னிங்ஸில் இன்று காலை 247 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை, இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டபோது 2 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்று 43 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கின்றது.

தனது 18ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பெத்தும் நிஸ்ஸன்க, தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலிருந்து இரண்டாம் நாள் ஆட்டம் முடியும் வரை மிகுந்த தன்னம்பிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி தனது 4ஆவது சதத்தைக் குவித்தார்.

பங்களாதேஷுக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும் பெத்தும் நிஸ்ஸன்க சதம் குவித்து அசத்தியிருந்தார்.

இலங்கையின் முன்வரிசை வீரர்கள் மூவரும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொண்டு மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடியது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்தது.
குறிப்பாக மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க ஆரம்ப விக்கெட்டில் லஹிரு உதாரவுடன் 88 ஓட்டங்களையும் 2ஆவது விக்கெட்டில் தினேஷ் சந்திமாலுடன் மேலும் 194 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் தினேஷ் சந்திமால் அநாவசியமாக ரிவேர்ஸ் சுவீப் ஷொட் அடிக்க முயற்சித்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்து சதத்தை 7 ஓட்டங்களால் தவறவிட்டார்.
அவர் 153 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 93 ஓட்டங்களைப் பெற்றார்.
பெத்தும் நிஸ்ஸன்க, 238 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகளுடன் 146 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.
அவருடன் இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
ஆரம்ப வீரர் லஹிரு உதார 40 ஓட்டங்களைப் பெற்றார்.
இன்றைய தினம் முழு நாளும் துடுப்பெடுத்தாடி 550க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து பங்களாதேஷுக்கு நெருக்கடிக்கைக் கொடுப்பதே இலங்கையின் திட்டமாகும்.
பந்துவீச்சில் நயீம் ஹசன், தய்ஜுல் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
முன்னதாக தனது முதலாவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களிலிருந்து இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த பங்களாதேஷ், கடைசி 2 விக்கெட்களை 27 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது.
தய்ஜுல் இஸ்லாம் திறமையாக துடுப்பெடுத்தாடி 5 பவுண்டறிகளுடன் 33 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார்.
முதல் நாள் துடுப்பாட்டத்தில் ஷத்மான் இஸ்லாம் 46 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 35 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் நயீம் ஹசன் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை பந்துவீச்சில் அறிமுக வீரர் சொனால் தினூஷ 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 9.3 ஓவர்கள் பந்துவீசி 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அசித்த பெர்னாண்டோ 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM