இந்தியா முழுவதிலும் உள்ள திரையுலகத்தினராலும் , ரசிகர்களாலும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படத்தில் இடம்பெற்ற' சிக்கிடு ' எனும் முதல் பாடலும், பாடலுக்காக படமாக்கப்பட்ட பிரத்யேக காணொளியும் வெளியாகி ரசிகர்களை மகிழ்விப்பதுடன் சாதனையும் படைத்து வருகிறது.
இந்தியாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ' கூலி' திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொலிவுட் நடிகர் அமீர்கான், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் ஷாகிர், கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14-ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ' டேய் நவ்ரா டேய் டேய் சவுண்ட ஏத்து தேவா வர்றான் டேய்...' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்காக பிரத்யேகமாக படமாக்கப்பட்ட காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் அறிவு எழுத, இசையமைப்பாளர்களும், பின்னணி பாடகர்களுமான டி ராஜேந்தர் -அனிருத்- அறிவு - ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி துள்ளலிசையின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் இளம் தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இதன் காரணமாகவே இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் ' அஷ்டவதானி' டி ராஜேந்தர் பாடி ,ஆடி நடித்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகமான வரவேற்பை பெற்றிருக்கிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM