செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

26 Jun, 2025 | 05:34 PM
image

எம்மில் சிலருக்கு கழுத்து வலி , கழுத்துப் பகுதியில் விறைப்பு தன்மை , தோள்பட்டை மற்றும் கைகளில் சோர்வு மற்றும் பலவீனம், சிறிய பொருள்களை கூட உதாரணத்திற்கு பேனா மற்றும் நாணயங்கள் போன்றவற்றை கைகளில் வைத்திருப்பதற்கு இயலாத நிலை , சமநிலையில் தடுமாற்றம் , மரத்துப்போதல் அல்லது ஊசி போல் குத்துதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அவை முதுகெலும்பில் ஏற்பட்டிருக்கும் நரம்பியல் தொடர்பான குறைபாடுகள் என்பதை அவதானித்து, உடனடியாக வைத்தியரை சந்தித்து குறிப்பாக நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனையும் , சிகிச்சையும் பெற வேண்டும்.

முதுகெலும்பில் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அல்லது கழுத்துப் பகுதியில் ரூமடாய்ட் ஓர்த்தரைடீஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் , முதுகெலும்பில் தீங்கு விளைவிக்கும் மற்றும் தீங்கு விளைவிக்காத கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் இத்தகைய பாதிப்பு உண்டாகும்.‌ இவை பெரும்பாலும் கைகள் மற்றும் கைகளின் செயல்பாட்டை நிலை குலைய செய்ய வைத்து விடும். இதன் காரணமாக இதற்கு முதன்மையான நிவாரணத்தை பெற வேண்டும்.

இத்தகைய தருணங்களில் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் எம் ஆர் ஐ, சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.

சிலருக்கு Posterior Stabilization எனும் சத்திர சிகிச்சை மூலம் முதன்மையான  நிவாரணத்தை வழங்குவர். வேறு சிலருக்கு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து வேறு வகையினதான சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு நிவாரணம் அளிப்பர். 

நரம்பில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதால் சத்திர சிகிச்சைக்குப் பிறகு வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் இயன்முறை சிகிச்சை, உணவு முறை, வாழ்க்கை நடைமுறை ஆகியவற்றை உறுதியாக பின்பற்றினால் விரைவில் முழுமையான நிவாரணத்தை பெறலாம்.

வைத்தியர் விக்னேஷ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48
news-image

அகில்லெஸ் டெண்டினிடிஸ் எனும் காலில் ஏற்படும்...

2026-07-01 16:08:31
news-image

சிறுநீரக கற்களை அகற்றுவதற்கான நவீன சத்திர...

2026-06-30 17:12:11
news-image

பற்களை இழந்தவர்களுக்கு வர பிரசாதமான சைகோமா...

2026-06-29 16:50:27
news-image

திடீர் காது கேளாமை பாதிப்பிற்கான நவீன...

2026-06-26 16:17:41