இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் அவர்களுடைய சக்திக்கு ஏற்ற வகையிலும், அவர்களுடைய சமூக நிலையை பொறுத்தும் கடன் வாங்குகிறார்கள் அல்லது கடனாளியாக இருக்கிறார்கள்.
கடனாளியாக இருப்பவர்களின் ஒவ்வொரு நாளின் விடியலும் எதிர்பாராத தொல்லைகளை எதிர்கொள்ளும் நாளாகவே இருக்கும்.
ஒரு புள்ளியில் கடனாளியாக இருப்பதால் மன அழுத்தம் அதிகரித்து தவறான முடிவுகளை மேற்கொள்வதற்கு கூட தூண்டல் ஏற்படும்.
இத்தகைய தருணத்தில் உலகம் முழுவதும் முழு முதற் கடவுளாக போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமானை பிரத்யேகமாக வழிபடுவதன் மூலம் கடன் பிரச்சனையிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெற்று மகிழ்ச்சியாக வாழலாம் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். அத்தகைய பிரத்யேக வழிபாட்டை குறித்து அறிந்து கொள்ள ஆவலாக இருப்பவர்கள் தொடர்ந்து வாசிக்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் : வெள்ளை எள்ளால் தயாரிக்கப்பட்ட இனிப்பு உருண்டைகள்- பால் கொழுக்கட்டை -பால் பாயாசம்.
விநாயக பெருமானுக்கு ஏராளமான ரூபங்கள் உண்டு. நாம கரணங்களும் உண்டு. அதில் ஒன்றுதான் தருண கணபதி.
இத்தகைய தருண கணபதியின் திருவுருவ புகைப்படத்தை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அதனை உங்களது பூஜை அறையில் இடம் பெறச் செய்யுங்கள்.
வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6 மணி முதல் ஏழு மணிக்குள் பால் பாயாசம் -பால் கொழுக்கட்டை -வெள்ளை எள்ளால் தயாரிக்கப்பட்ட எள்ளுருண்டை ஆகியவற்றை நிவேதனமாக படைத்து அதனை மற்றவர்களுக்கு தானமாக வழங்க வேண்டும்.
இதனை சிலர் ஏற்க மறுத்தால் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அந்த ஆலய வளாகத்திற்குள் வருகை தரும் பக்தர்களுக்கு இதனை தானமாக வழங்கலாம். இதனை மேற்கொள்ள தொடங்கிய பிறகு ஓராண்டிற்குள் உங்களுடைய கடன் சுமை முழுவதுமாக குறைந்து, மறைந்து மகிழ்ச்சியில் திளைப்பீர்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM