விசாகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றம் ; சின்னஞ்சூட்டும் விழா பாராளுமன்ற செயலாளர் தலைமையில்

Published By: Digital Desk 2

26 Jun, 2025 | 02:30 PM
image

கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ சின்னஞ்சூட்டும் நிகழ்வு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர  தலைமையில் கடந்த 24ஆம் திகதி கல்லூரியின் ஜெமியஸ் தியெஸ் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கொழும்பு கல்வி வலயத்தின் பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் சமூகவிஞ்ஞானம்) ஹசினி விஜேவிக்ரம மற்றும் விசாகா கல்லூரியின் அதிபர் மனோமி செனவிரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, 

இந்நாட்டின் தற்போதைய சமூக, பொருளாதார, அரசியல் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு திருப்தியடையும் வகையில் அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியதுடன், சட்டவாக்கச் செயற்பாடுகள் குறித்து மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தினார். 

அத்துடன், விசாகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் தங்கள் பாடசாலை வாழ்க்கையில் கிடைத்த அனுபவத்துடன், நாட்டின் முக்கிய துறைகளுக்கு முழு அளவில் பங்களிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற விசாகா வித்தியாலயத்தின் அதிபர் மனோமி செனவிரத்ன, உரையாற்றுகையில்,

“கல்லூரி மாணவர்களின் தலைமைத்துவ திறன்களையொட்டிப் நான் பெருமைப்படுகிறேன். தலைவரின் வழிகாட்டலில் ஏனையவர்களும் பின் தொடர்வதில் குழு மனப்பான்மையுடன் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

2024/25 மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலையின் தேவைகளைக் கண்டறிந்து முன்னேறிய விதம் குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  மேலும், 

கல்லூரியின் பிரதி அதிபர் துலானி பிரியதர்ஷனி மற்றும் மாணவர் பாராளுமன்றத்தின் பொறுப்பாசிரியர் அனுஷா ஏக்கநாயக்க ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.”

விசாகா வித்தியாலயத்தின் 2025/2026ற்கான மாணவர் பாராளுமன்றத்தின் புதிய பிரதமர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றதுடன், கல்லூரி அதிபர் மனோமி செனவிரத்ன மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் சின்னஞ்சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

விசாகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சின்னம் சின்னஞ்சூட்டும் விழாவின் முடிவில், 2025/26 ஆம் ஆண்டுக்கான பிரதமர், 2024/25 மாணவர் பாராளுமன்ற சபாநாயகரிடமிருந்து அடையாளமாக செங்கோலைப் பெற்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன...

2025-12-17 17:01:21
news-image

நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்!

2025-12-17 15:24:48
news-image

விபத்தில் சிக்கி தாயும் குழந்தையும் பரிதாபமாக...

2025-12-17 16:53:34
news-image

இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி...

2025-12-17 16:50:28
news-image

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில்...

2025-12-17 17:08:08
news-image

முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற இருவர்...

2025-12-17 16:32:52
news-image

வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின்...

2025-12-17 16:11:48
news-image

இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது...

2025-12-17 15:13:40
news-image

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நோர்வூர்ட் மக்கள்...

2025-12-17 16:16:58
news-image

டித்வா சூறாவளி சவால்களைத் தோற்கடித்து இலங்கை...

2025-12-17 16:11:19
news-image

மாணவர்களிடம் பணம் பறித்த மாணவர் குழு...

2025-12-17 16:12:11
news-image

வடமேற்கு கட்டளை கடற்படை வைத்தியசாலையில் இரத்த...

2025-12-17 15:03:53