பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள செயன்முறை அவசியம் ; உயர்ஸ்தானிகரிடம் வடக்கு சிவில் சமூகம் வலியுறுத்தல்

Published By: Vishnu

26 Jun, 2025 | 12:36 AM
image

(நா.தனுஜா)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்த வடக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள செயன்முறையொன்றின் தேவைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைத் தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த விஜயத்தின் ஓரங்கமாக புதன்கிழமை (25) பிற்பகல் 3.00 மணியளவில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினரை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் சந்தித்த உயர்ஸ்த்தானிகர், சுமார் ஒருமணிநேரம் வரை அவர்களுடன் பரந்துபட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் வாழும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வந்து மீளக்குடியமர்த்தல், பட்டதாரிகள் முகங்கொடுத்து வரும் வேலையில்லா பிரச்சினை, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகங்கொடுத்துவரும் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகள் என்பன தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் உயர்ஸ்தானிகரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

அதேவேளை வடக்கில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்தும் அதன் விளைவாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் முகங்கொடுத்து வரும் நெருக்கடிகள் குறித்தும் வோல்கர் டேர்க்கிடம் எடுத்துரைத்த மற்றொரு பிரதிநிதி, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அதேபோன்று ஏனைய பிரதிநிதிகளில் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், புதிதாக கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகள், காணி சுவீகரிப்பு, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் நிலவும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு தெளிவுப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பி.ஐங்கரநேசன், தமிழ்  சிவில் சமூக அமையத்தின் பிரதிநிதி பி.என்.சிங்கம், சிவகுரு ஆதினம் வேலன் சுவாமிகள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஏ.டி.தெலீசன், வட-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதி யோகதாஸா கனகரஞ்சனி, கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இன்பம், ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பிரதிச் செயலாளர் கருணாகரன் நாவலன் ஆகியோரின் கையெழுத்துடன் பொறுப்புக்கூறலுக்கான நியாயமான செயன்முறையொன்றின் தேவைப்பாட்டினை வலியுறுத்தி உயர்ஸ்தானிகரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

67,000 குடும்பங்களுக்கு குடிநீர்; இலங்கையின் இரண்டாவது...

2026-07-10 19:26:46
news-image

ஹவ்லொக் பகுதியில் துப்பாக்கி மீட்பு சம்பவம்:...

2026-07-10 18:54:56
news-image

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா?...

2026-07-10 17:52:32
news-image

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள்...

2026-07-10 18:07:24
news-image

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே...

2026-07-10 17:36:54
news-image

143 களஞ்சியசாலைகளில் திங்கள் முதல் நெல்...

2026-07-10 19:13:12
news-image

சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5...

2026-07-10 18:00:12
news-image

களனி கங்கையைப் பாதுகாப்பதற்கு வீடமைப்பு மற்றும்...

2026-07-10 16:52:31
news-image

சிறைச்சாலையில் மோதல் : அமைச்சரின் திட்டமிடல்...

2026-07-10 16:51:57
news-image

நாமல் ராஜபக்ஷ ‘ஏ – டீம்...

2026-07-10 16:51:18
news-image

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரித்து பேராதனை வைத்தியர்கள்...

2026-07-10 16:39:41
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைக்கு நீதியும் பொறுப்புக்கூறலும்...

2026-07-10 16:29:24