இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோத­வுள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள சிம்­பாப்வே அணி இலங்­கைக்கு எதி­ரான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–2 என வெற்­றி ­கொண்டு வர­லாற்று சாத­னையை நிகழ்த்­தி­யது.

இந்­நி­லையில் இந்தத் தொடரில் தோற்­றதன் எதி­ரொ­லியாக இலங்கை அணியில் பல அதி­ரடி மாற்­றங்கள் நிகழ்த்­தப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக ஒருநாள், டெஸ்ட் மற்றும் இரு­ப­துக்கு 20 என மூன்று வகைக் கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கும் தலை­வ­ராக இருந்த அஞ்­சலோ மெத்­தியூஸ் திடீ­ரென பதவி வில­கினார்.

இந்­நி­லையில் ஒருவர் வகித்த பத­வியை இரு­வ­ருக்கு பிரித்து வழங்­கி­யது இலங்கைக் கிரிக்­கெட் நிறு­வனம்.

அதன்­படி டெஸ்ட் போட்­டி­களுக்கு தினேஷ் சந்­தி­மா­லையும், ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு 20 போட்டிகளுக்கு உபுல் தரங்­க­வையும் தலை­வர்­க­ளாக நிய­மித்­துள்­ளது.

இந்­நி­லையில் கடும் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யி­ருக்கும் இலங்கை அணி இன்று டெஸ்ட்

போட்­டியில் சிம்­பாப்வே அணியை சந்­திக்­கி­றது.

இந்தப் போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இலங்கை அணி 

தினேஷ் சந்­திமால் (தலைவர்), உபுல் தரங்க (உப தலைவர்), அஞ்­சலோ மெத்­தியூஸ், நிரோஷன் திக்­வெல்ல, திமுத் கரு­ணா­ரத்ன, தனுஷ்க குண­தி­லக, குசல் மெண்டிஸ், அசேல குண­ரத்ன, ரங்­கன ஹேரத், டில்­ருவன் பெரேரா, சந்­தகான், விஷ்வ பெர்னாண்டோ, துஷ்­மந்த சமீர, சுரங்க லக்மால், லஹிரு குமார.

இலங்கை, டெஸ்ட் போட்­டி­யொன்றில் இறு­தி­யாக சிம்­பாப்வே அணியை அவர்­க­ளது சொந்த மண்ணில் கடந்த 2016ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் சந்­தித்­தி­ருந்­தது. 

அதில், ரங்­கன ஹேரத்தின் சிறந்த பந்­து­வீச்சின் கார­ண­மாக

இலங்கை அணி இரண்டு போட்

­டிகள் கொண்ட தொடரை 2–-0 என கைப்­பற்­றி­யி­ருந்­தது.

இது­வ­ரையில் இரண்டு அணி­

களும் 17 டெஸ்ட் போட்­டி­களில்

விளை­யா­டி­யி­ருக்­கின்­றன. 

அதில் 12 போட்­டி­களில் இலங்கை அணி வெற்றி பெற்­றுள்­ள­தோடு, 5 போட்­டிகள் சம­நிலை அடைந்­தி­ருக்­கின்­றன. 

எந்­த­வொரு டெஸ்ட் போட்­டி­யிலும் சிம்­பாப்வே அணி­யா­னது இது­வரை இலங்­கையை வீழ்த்­த­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சந்­திமால், திற­மை­மிக்க துடுப்­பாட்ட வீரர் எனினும் தனது அண்­மைய மோச­மான ஆட்­டங்­களின் கார­ண­மாக இலங்கையின் ஒரு நாள் அணியில் சேர்க்­கப்­ப­டாது போயி­ருந்தார். எனினும், டெஸ்ட் போட்­டி­களில் 42.33 என்­கின்ற சிறப்­பான ஓட்ட சரா­ச­ரி­யினைக் கொண்­டி­ருக்கும் இவர் அணியின் தலைவர் என்­பதால் துடுப்­பாட்­டத்­தினை மேலும் சிறந்த முறையில் முன்­னெ­டுக்க வேண்­டிய கட்டாயத்தில் காணப்படுகின்றார்.

இந்தப் போட்டி குறித்து கருத்து தெரிவித்த தினேஷ் சந்திமால், அழுத்தங்களுக்கு மத்தியில் அணியை வழிநடத்த வேண்டிய பொறுப்பை என்னிடம் தந்திருக்கிறார்கள்.

இந்தப் போட்­டியில் நாம் கடு­மை­யாக விளை­யா­ட­வேண்டும். இதில் மட்­டு­மல்ல, எந்­த­வொரு போட்­டி­யாக இருந்­தாலும் எமது முழுத் திற­மை­யுடன் நாம் போட்­டி­யிட வேண்டும். மூத்த மற்றும் இளம் வீரர்­களைக் கொண்ட அணி­யாக நாம் இருக்­கிறோம். அதே­வேளை சிம்­பாப்வே அணியும் எமக்கு சவால் விடுக்கும் வகையில் ஆடும் என்று எதிர்­பார்க்­கிறோம். அதற்கு ஏற்ற வியூ­கங்­க­ளுடன் இன்­றைய போட்­டியில் களமிறங்குவோம் என்றார்.