யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் ; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் சஜித் தெரிவிப்பு

25 Jun, 2025 | 12:46 PM
image

(எம்.மனோசித்ரா)

உலகலாவிய ரீதியில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பிரகடனங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒரு நாடு என்ற ரீதியில் எமக்கும் இருக்கிறது. அந்த வகையில் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (24) மாலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க் கெர்டேக் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையுடன் எமது நாட்எல் மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்கள் பரவலாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

ஜனநாயக சமூகமொன்றில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலகலாவிய ரீதியில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பிரகடனங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒரு நாடு என்ற ரீதியில் எமக்கும் இருக்கிறது.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், இழப்பீட்டு அலுவலகம், தேசிய சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் போன்ற காணப்படுகின்றன. 

போர் காலத்தில் பிரகடனங்கள் ஊடாக அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தில் தீர்க்கமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

அந்த மாற்றங்களுக்காக நாம் எப்போதும் முன்னிற்போம். அதேபோன்று நிகழ்நிலை காப்பு சட்டம் ஊடாக கருத்து வெளிபாட்டு சுதந்திரம், மற்றும் சமூக வலைத்தளங்களைப் பாவனையாளர்களின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படக் கூடும் என பலரும் நம்புகின்றனர். 

எனவே இந்த சட்டத்திலும் தெளிவான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான நான்காவது தூண் சுதந்திரமான ஊடகமாகும். இந்த ஊடக சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

அதற்காக நாம் முன்னிற்க வேண்டும். ஊடகங்கள், ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், அவர்களின் உரிமைகளுக்காக பல இடங்களில் பேசப்பட்டிருக்கிறது. 

ஊடக சுதந்திரத்தை முழுமையாக முடக்குவதற்காக வெ வ்வேறு குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் குரல் கொடுப்போம். 

அரசியல் மற்றும் சிவில் உரிமைகளைப் போன்றே மக்களின் பொருளாதார உரிமைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை, பணவீக்கம் என்பவற்றோடு வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் மக்கள் வாழ்வதற்கான உரிமை படிப்படியாக பலவீனமடைந்து வருகிறது. மக்களின் சகல உர்pமைகளையும் பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பில் தெளிவான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனையே ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடமும் வலியுறுத்தியிருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:02:32
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54