இன்றைய சூழலில் பான் இந்திய திரைப்படங்களில் இந்துத்துவா சார்பாக கருத்துருக்கள் இடம்பெற வேண்டும் என்பது எழுதப்படாத வணிக மரபாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் இந்து சமயத்தில் உள்ளவர்களில் பலராலும் வணங்கத்தக்க நிலையில் இருக்கும் 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் சரித்திரத்தை... படைப்பு சுதந்திரத்துடன் கூடிய 'கண்ணப்பா ' என திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் எதிர்வரும் 27ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது .
இந்நிலையில் தமிழில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் நடிகர் சரத்குமார் பேசுகையில், '' கண்ணப்ப நாயனாரின் கதையைத்தான் இந்தப் படம் பேசுகிறது என்றாலும் , கண்ணப்ப நாயனாரின் இளமைக் காலமும், அவருடைய பக்திக் கொள்கையையும் விவரிக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
கடவுளை நம்பாத கண்ணப்பர் ..எப்படி கடவுளுக்கு விருப்பமான அடியாராக மாறினார் என்பதை இப்படத்தின் நாயகனான விஷ்ணு மஞ்சுவின் கற்பனையான கோணத்தில் அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. '' என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM