அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து சைட்டத்திற்கு எதிரான தேசிய முன் மொழிவுகளை உள்ளடக்கிய திட்டங்களை விவாதித்துள்ளது.

அலரி மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற இக் கலந்துரையாடலில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் சிலரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் கலந்து கொண்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன் வைக்கப்பட்ட சைட்டத்திற்கு எதிரான முன் மொழிவுகளை ஆராய்ந்து பார்த்து இதில் தவறாக பார்ப்பதற்கு எதுவும் இல்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இத் திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமர் சுகாதார அமைச்சரிடம் விசாரித்த போது, அமைச்சர் சேனாரத்ன “சைட்டத்தில் மாணவர்களது முன் மொழிவுகளை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்தி வைப்பதற்கான திட்டம் இருந்ததா என கேட்டுள்ளார்.”

இதற்கு பதிலளித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் “சைட்டத்தில் நிரந்தரமாக மாணவர்களின் சேர்க்கைகளை நிறுத்த வேண்டிய தேவை இருந்தாகவும் மாணவர்கள் தற்காலிக சட்டபூர்வ கட்டமைப்பை அமுல் படுத்துமாறு கோரி நின்றதாகவும் குறிப்பிட்டனர்.”

இதனைத் தொடர்ந்து பிரதமர் தற்காலிகமாக மாணவர்களது சேர்க்கைகளை இடை  நிறுத்தி சட்ட பூர்வ கட்டமைப்பை நடைமுறைப்படுத்துமாறு சுகாதார அமைச்சருக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.