(எம்.ஆர்.எம்.வஸீம்)

புதிய அரசியலமைப்பினூடாக இனரீதியில் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டால் நாடு தென் சூடானின் நிலைக்கு செல்வதை தவிர்க்க முடியாது. தமிழ் தலைவர்கள் வரலாறு ரீதியாக இதனையே கோரி வந்தனர். அத்துடன் ஆயுத முனையால் மேற்கொள்ள முடியாமல்போன எமது இலட்சியத்தை வேறுவழியில் அடைந்துகொள்வோம் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததை நிலைநாட்டவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய அமைப்புகளுக்கான மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.