இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் மஹேஷி சூரசிங்க விஜேரத்ன உட்பட மூவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
இவர்கள் மூன்றாம் தரப்பினூடாக மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்களின் பிணை மனுக்களை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (24) நிராகரித்தது.
அதன்படி, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் முன்வைத்த சான்றுகளையும், பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM