bestweb

இலங்கையின் பொருளாதார மீட்பில் சமூக உரையாடலின் முக்கியத்துவம் : ஐ.நா. பொது சேவை தினத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

Published By: Digital Desk 2

24 Jun, 2025 | 01:18 PM
image

இலங்கையின் பொருளாதார மீட்பு முயற்சியில் சமூக உரையாடலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகளின் பொது சேவை தின நிகழ்வில் அரச துறை அதிகாரிகள், தொழிற்சங்கங்கள், அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து, அரச சேவை வழங்கலை மேம்படுத்தி சமூக ஒற்றுமையையும் முன்னேற்றும் உயர் மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நிகழ்வு அரச சேவையின் மாற்றும் சக்தி, சமூக நம்பிக்கை மற்றும் அமைதி நிலைநிறுத்தலில் சமூக உரையாடலின் முக்கியப் பங்கு ஆகியவற்றை வலியுறுத்தி, இலங்கையின் பொருளாதார மீட்பு மற்றும் சமூக முன்னேற்றம் நோக்கி அரச துறையின் முக்கிய பங்களிப்பை முன்வைத்தது.

நிறுவன ரீதியான சீர்திருத்தம் மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் ஒரு சவாலான காலகட்டத்தில் இலங்கை தொடர்ந்து பயணித்து வருவதால், அரச துறையானது தேசிய முன்னேற்றத்தின் முக்கிய இயக்கியாகவும் குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பிரதான இடைமுகமாகவும் உள்ளது. எனினும், மட்டுப்படுத்தப்பட்ட நிதிவளம், அதிகரித்வரும் சேவைத் தேவைகள் மற்றும் பலவீனமான நிறுவன உரையாடல் செயன்முறைகள் என்பன அரச நிறுவனங்களை குறிப்பிடத்தக்க அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளன.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO), ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (UNFPA) மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பு (UNESCO) ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் "சமாதானம் மற்றும் நெருக்கடி தடுப்புக்கான சமூக உரையாடல்" என்ற தலைப்பிலான ஒரு கூட்டு ஐ.நா. முயற்சி,  இலங்கையின் பொதுத் துறையில் உரையாடல் மற்றும் பிணக்கு தீர்வுக்கென அனைவரையும் உள்ளடக்குகின்ற  பாலின ரீதியில் பதிலளிக்கக்கூடிய செயன்முறைகளை வலுப்படுத்த முயல்கிறது. இந்த முன்முயற்சிக்கு கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா,  ஐ.நா. சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதியம் மற்றும் கூட்டு SDG நிதி ஆகியவற்றின் பக்கபலத்தைக் கொண்ட ஓர் ஒருங்கிணைந்த நிதி வழங்கும் செயன்முறையான  ஐ.நா. இலங்கை SDG நிதியத்தின் மூலம் உதவி வழங்கப்படுகிறது.

இலங்கையிலுள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச, அனைவரைம் உள்ளடக்குகின்ற உரையாடல் மூலம் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கலந்துரையாடலைத் தொடக்கிவைத்தார்: 

“சமூக உரையாடல் என்பது தொழில்துறை நடவடிக்கைகளைக் குறைப்பது மட்டுமல்ல. அது நம்பிக்கையை வளர்ப்பது பற்றியதும்கூட. நம்பிக்கை நிலவும்போது சேவைகள் மேம்படும், மன உறுதி அதிகரிக்கும், அபிவிருத்தி ஆதாயங்கள் மேலும் பேண்தகு தன்மையுள்ளதாக இருக்கும், அத்துடன் சமூகத்துடனான ஒற்றுமையும் இருக்கும்” என்றார்.

தொழில் செய்யுமிட மன்றங்கள்,  துறைசார் தளங்கள் மற்றும் ஒரு தேசிய அரச துறை உரையாடல் மன்றம் போன்ற கட்டமைக்கப்பட்ட செயன்முறைகள் எவ்வாறு தகராறு தடுப்பு மற்றும் தீர்வுக்கான மாற்று வழிகளை வழங்க முடியும், தொழில்துறை நடவடிக்கை மற்றும் அமைதியின்மை இடர்களைக் குறைக்க முடியும்,  தொழில் செய்யுமிட நிலைமைகளை மேம்படுத்த முடியும் மற்றும் தடையற்ற பொதுச் சேவை வழங்கலை உறுதி செய்ய முடியும் என்பன குழுக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டன. 

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ILO நாட்டுப் பணிப்பாளர் ஜோனி சிம்சன், இந்த முயற்சியின் பரந்த தாக்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில்: 

“சமூக உரையாடல் என்பது சமூக நீதி மற்றும் கண்ணியமான பணியின் அச்சாணியாக உள்ளது. இன்று நாம் மீள்தன்மை, பாலின ரீதியில் பதிலளிக்கக்கூடிய மற்றும் உள்ளடக்குகின்ற சமூகங்களையும் பொருளாதாரங்களையும் வடிவமைப்பதில் அரச அதிகாரிகளின் முக்கிய பங்கை அங்கீகரிக்கிறோம். இலங்கையில் சமூக உரையாடல் என்பது வெறும் கொள்கை மட்டுமல்ல, அது நம்பிக்கையை வளர்ப்பதற்கும் சவால்களைத் தீர்ப்பதற்கும்,  நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஒரு கருவியாகச் செயற்படுகின்றது. அரச நிறுவனங்கள், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் நீடித்த அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் அர்த்தமுள்ள சமூக உரையாடலில் ஈடுபடும்போது அவர்களுக்கு ஆதரவளிக்க ILO உறுதிபூண்டுள்ளது.” என்று தெரிவித்தார். 

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார கருத்துத் தெரிவிக்கையில், 

இலங்கையின் அரச துறையில் சமூக உரையாடல் கலாசாரம் ஆழமாக வேருன்றி வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன் எனக் குறிப்பிட்டார். “பிணக்குகளைத் தடுப்பதற்கான மாற்று வழிகள் மற்றும் தீர்வுச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதில் நாம் பிரதான அரச துறைகளுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளதால், தொழிலிடத்து ஒத்துழைப்பு உணர்வினால் முகாமைத்துவத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவுகள் ஏற்கனவே பலமடைய ஆரம்பித்துள்ளன. இச் செயன்முறையைத் தக்கவைப்பதற்கு மேலும் கூடுதலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம், அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துவதில் நாம் தொடர்ந்து முன்னேற முடியும்.” என்றார்.

இலங்கை முலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம்  வஜிர எல்லபொல,

சமூக உரையாடல் என்பது தொழில் வழங்குநர்கள், அரசாங்கம் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே உரையாடல், ஆலோசனை, பேச்சுவார்த்தை அல்லது தகவல் பரிமாற்றம் நடைபெறும் ஒரு செயன்முறை என்பதை எடுத்துக்காட்டினார்: 

"இது சமூக-பொருளாதாரக் கொள்கை, தொழிலாளர் சந்தை அல்லது தொழில் செய்யுமிடம் தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இது சமூக பங்காளர்களுடன் உரையாடல் மூலம் விடயங்களைக் கையாள்வதற்கு ஒரு மேடையை அமைத்து பொருத்தமான நிலைமைகளை உருவாக்குகிறது. சமூக உரையாடல் என்பது குறிக்கோள்களைக் காட்டிலும் செயன்முறைகளாகக் கருதப்பட வேண்டும். இது தொழிலாளர் சந்தை மற்றும் சமூகக் கொள்கை விடயங்களிலும் ஒருமித்த நோக்கங்களை அடைவதற்கான வழிகளைக் குறிக்கிறது". என்று அவர் மேலும் கூறினார்.

பொது சேவையை ஓர் அத்தமுள்ள, தொழில் நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் மக்களை மையமாகக் கொண்ட ஒரு சேவையாக மீண்டும் உறுதிப்படுத்துவதிலும் முன்னெடுப்பதிலும் இக் குழுக் கலந்துரையாடல் ஒரு முக்கியமான படியைக் குறித்தது,  எதிர்கொள்ளப்படும் சவால்களை மட்டுமல்லாமல், அரச அதிகாரிகளின் வாழ்க்கை யதார்த்தங்களையும் புத்தாக்கம் மற்றும் சீர்திருத்தத்திற்கான வாய்ப்புகளையும் அது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

ஐக்கிய நாடுகள், இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்து அனைவரையும் உள்ளடக்கும் வகையில் ஒரு பேண்தகு தன்மையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகிறது. கூட்டாகவும் அதன் சிறப்பு நிறுவனங்கள், நிதியங்கள், திட்டங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலமும், தரமான சமூக சேவைகளுக்கான சமமான அணுகல், வலுப்படுத்தப்பட்ட மனித திறன்கள், மனித உரிமைகள் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றுடன் நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு உதவ ஐ.நா. முயற்சி செய்கின்றது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-17 06:35:07
news-image

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால்...

2025-07-17 02:52:27
news-image

எனது திட்டமே பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும்;...

2025-07-17 02:48:22
news-image

புத்தகப்பையுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 -...

2025-07-17 02:42:28
news-image

சஞ்சீவ் கொலை வழக்கில் உதவி செய்த...

2025-07-17 02:31:29
news-image

கல்வியின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு TikTok-கின் ஆதரவு

2025-07-17 02:15:57
news-image

2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க  வரவு...

2025-07-17 02:17:52
news-image

அமெரிக்க வரியை குறைக்காவிடின் ஆடைத்துறை வீழ்ச்சியடையும்...

2025-07-16 17:08:03
news-image

1990 பேர் புதிதாக சுகாதார சேவைக்கு...

2025-07-16 22:53:03
news-image

ரஞ்சித் ஆண்டகை மீது பழிபோட அரசு...

2025-07-16 17:08:50
news-image

எதிர்க்கட்சிகளை முடக்க அரசாங்கம் தீவிர கவனம்...

2025-07-16 17:28:29
news-image

மூதூர் - பெரியவெளி அகதிமுகாம் படுகொலையின்...

2025-07-17 03:37:55