பலாலி பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகம் தற்போது துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த யுத்தத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்த நிலையில், துறைமுகத்தினதும் அதனை சூழவுள்ள பகுதிகளின் நீர்ப்பாதைகள் மற்றும் அடித்தளங்கள் மோசமாக சேதமடைந்திருந்தன.
மேலும், கடல் பகுதியில் பலத்த கற்கள் காணப்படுவதால், அப்பகுதியிலுள்ள கடற்தொழிலாளர்கள் படகுகளை கடலுக்குள் செலுத்தும்போது கடலின் ஆழம் சரிவர இல்லாததுடன், அடிக்கடி படகுகள் சேதமடைவது போன்ற இடர்களை எதிர்கொண்டு வந்துள்ளனர்.
இதனை அடுத்து, பல ஆண்டுகளாகக் கடற்தொழிலாளர்கள் துறைமுக பகுதிகளை புனரமைக்கக் கோரி வந்த நிலையில், தற்போது இந்த பணி நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் திங்கட்கிழமை (23) அப்பகுதிக்கு நேரில் சென்று நிலவரத்தை பார்வையிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM