2025 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சேவல் சின்னத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு நுவரெலியா மாவட்டம் நுவரெலியா மாநகர சபை, நுவரெலியா பிரதேச சபை, அக்கரபத்தனை பிரதேச சபை, கொட்டகலை பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் திங்கட்கிழமை (23) பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்கள்.
இதன் அடிப்படையில் நுவரெலியா மாநகர சபையின் பிரதி மேயராக இ.தொ.கா வின் சிவன்ஜோதி யோகராஜ், நுவரெலியா பிரதேச சபை தவிசாளராக வேலு யோகராஜ், அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளராக ரதிதேவி, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளராக ராஜமனி பிரசாத் ஆகியோர் உத்தியோகப்பூர்வமாக தமது கடைமைகளை திங்கட்கிழமை (23) பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், முன்னிலையில் பதவி ஏற்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டு, உள்ளூராட்சி மன்றம் செயலாளர்களிடம் பத்திரத்தை சமர்ப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தவிசாளர் ராஜதுரை, உள்ளூராட்சி மன்றம் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் இ.தொ.கா வின் முக்கியஸ்த்தர் என பலர் கலந்துக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM