மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலை காரணமாக மூடப்பட்ட ( Aero Space ) வான்வெளி வழி இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை 01.00 மணி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன் அதன் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் விமானங்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகும் என கட்டுநாயக்க விமான செயல்பாட்டுக் குழுவின் தலைவர் ரோஷனி மாசகோரல தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
பதற்ற நிலை காரணமாக கத்தாரின் வான்வெளி வழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் கத்தாரின் விமான சேவைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
கத்தாரின் தோஹாவிலிருந்து நேற்று திங்கட்கிழமை (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த விமானம் ஒன்று இன்னும் விமான நிலையத்தை வந்தடையவில்லை.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்படவிருந்த விமானங்களுக்கான அனுமதி இன்று செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் கிடைக்கும் எனவும் கட்டுநாயக்க விமான செயல்பாட்டுக் குழுவின் தலைவர் ரோஷனி மாசகோரல தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM