யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைத்துள்ள உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றத்தில் நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பகுதியில் உள்ள பலசரக்கு கடைகள், உணவகங்கள் என்பன பொது சுகாதார பரிசோதகரினால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன் போது, பலசரக்கு கடை ஒன்றில் இருந்து, காலாவதியான பொருட்கள் பல அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. அத்துடன் உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
அதனை அடுத்து உணவகம் மற்றும் பலசரக்கு கடைக்கு எதிராக திங்கட்கிழமை (23) பொது சுகாதார பரிசோதகரினால் யாழ் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர்.
அதனை அடுத்து உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்த நீதவான், பலசரக்கு கடை உரிமையாளருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதித்தார்.
உணவக உரிமையாளருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன், உணவகத்தில் உள்ள சீர்கேடுகளை சீர் செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு அறிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM