வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான  குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 27 கைதிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஐந்து வருடங்களின் பின்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணை ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.