காத்தான்குடியில் விஷர் நாய்கள் ஆடுகளை கடித்த சம்பவம் – ஐந்து ஆடுகள் பலி

Published By: Vishnu

23 Jun, 2025 | 07:02 PM
image

காத்தான்குடியில் (23) திங்கட்கிழமை அதிகாலை நகர சபையை அண்மித்த ஷைஹுல் பலாஹ் வீதியில் விஷர் நாய்க்கூட்டம் ஒரு காணியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு ஆடுகளை கடித்தது. இதில் ஐந்து ஆடுகள் பலியாகி, ஒன்று காயமடைந்துள்ளதாக காணப்பட்டு வருகின்றது.

காணியில் இருந்த ஒரு சிறிய வழியூடாக நுழைந்த நாய்கள், ஆடுகளை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளன. சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் உரிமையாளருக்கு சுமார் ரூ.1.5 இலட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இது பொதுமக்களில் மிகுந்த அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த நாய்கள் நாள்தோறும் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீதிகளில் சுதந்திரமாக சுற்றித்திரியும் நிலையில், இன்று ஆடுகள் எனில் நாளை மக்களும், சிறுவர்களும் தாக்கப்படக் கூடும் என மக்கள் அஞ்சுகின்றனர்.

இதனை முன்னிட்டு, காத்தான்குடி நகர சபை தவிசாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு, பாவனையற்ற நாய்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு ஆகும்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நகர சபையின் கடமையாக இருப்பதால், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் விரைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:04
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18