புதுமுக நடிகர் சுதர்சன் கோவிந்த் - புதுமுக நடிகை அர்ச்சனா ரவி ஆகிய இருவரும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' நீ பார்எவர்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அசோக் குமார் கலைவாணி இயக்கத்தில் உருவாகி வரும் ' நீ பார் எவர் 'எனும் திரைப்படத்தில் புதுமுக கலைஞர்களுடன் வை. ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எம். ஜே. ஸ்ரீராம், ரீதிகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர் வித்யா, பிரதோஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் ஹேமந்த் இசையமைத்திருக்கிறார். செயலியை உருவாக்குவதன் பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'தருணம்' எனும் திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் தயாரித்திருப்பதாலும், புதுமுக கலைஞர்களின் கூட்டணியில் இன்றைய இணைய உலகில் பேசு பொருளாக இருக்கும் செயலியை பற்றிய படமாக உருவாகி இருப்பதாலும்.. இப்படத்திற்கு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM