தமிழ் மேடை நாடகத் துறையில் தனித்துவமான அடையாளத்துடன் இன்று வரை கோலோச்சும் நட்சத்திர கலைஞரும், தமிழ் திரையுலகில் அனுபவம் வாய்ந்த மூத்த நடிகருமான வை. ஜி. மகேந்திரன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சாருகேசி' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' சாருகேசி 'எனும் திரைப்படத்தில் வை. ஜி. மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், 'தலைவாசல்' விஜய் , ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி , லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் என ஏராளமானவர்கள் நடித்துள்ளனர் சஞ்சய் லோக்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ' தேனிசைத்தென்றல்' தேவா இசையமைத்திருக்கிறார். இசை கலைஞர் ஒருவரின் உணர்வு பூர்வமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அருண் விசுவல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். அருண் தயாரித்திருக்கிறார்.
விரைவில் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில்,
'' நாடகத்தை திரைப்படமாக மாற்றுவது கடினம். சாருகேசி நாடகத்தை நானும் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து வை.ஜி. மகேந்திரனிடம் இந்த நாடகத்தை திரைப்படமாக உருவாக்குங்கள் என கோரிக்கை விடுத்திருக்கிறேன். அப்போது இதே கோரிக்கையை சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் சொல்லி இருப்பதாக குறிப்பிட்டார். அதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சவாலாக இருந்தாலும் இப்படத்தின் திரை கதையை இரண்டு நாளில் நிறைவு செய்தேன். இப்படத்திற்காக வை. ஜி மகேந்திரனின் பங்களிப்பு மறக்க முடியாதது '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM