அறிமுக நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் நடிப்பில் தயாராகி இருக்கும் ' குட் டே ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜு முருகன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
அறிமுக இயக்குநர் N. அரவிந்தன் இயக்கத்தில் உருவாகி உள்ள ' குட் டே ' திரைப்படத்தில் பிரித்விராஜ் ராமலிங்கம் , 'மைனா' நந்தினி , வேல. ராமமூர்த்தி, பக்ஸ் பகவதி பெருமாள் , ' ஆடுகளம் 'முருகதாஸ், போஸ் வெங்கட் என பலர் நடித்துள்ளனர்.
மதன் குண தேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். மது அருந்தும் பழக்கம் தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்கும் இந்த திரைப்படத்தை நியூ மோங்க் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரித்விராஜ் ராமலிங்கம் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கு பற்றிய படத்தின் தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான பிருத்திவிராஜ் ராமலிங்கம் பேசுகையில், '' பணம் இல்லாமலும், நண்பர்களின் நம்பிக்கையாலும் உருவானது தான் இந்தத் திரைப்படம். என் நண்பரும் , கவிஞரும், பாடலாசிரியருமான கார்த்திக் நேதாவின் வாழ்க்கையில் குடிப்பழக்கம் மற்றும் அது தொடர்பான மனநிலை குறித்த உரையாடலில் இருந்து இப்படத்தின் கதை உருவானது.
'தமிழகத்தின் டொலர் சிட்டி' என குறிப்பிடப்படும் திருப்பூர் மாநகரத்தின் கதை கள பின்னணியில் அங்கு இயங்கும் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் ஊழியன் ஒருவரின் வாழ்வில் நெருக்கடியான தருணத்தில் ஒரே இரவில் சந்திக்கும் மனிதர்களும், சம்பவங்களும் தான் இப்படத்தின் திரைக்கதை. இதை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் சமூக அக்கறையுடன் கூடிய படைப்பாக உருவாக்கி இருக்கிறோம் '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM