ஜூலை மாதம் நான்காம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ' 3 BHK ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' இடி மழை' எனும் பாடல் வெளியாகி , குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இதன் காரணமாக படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.
இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ' 3 BHK ' திரைப்படத்தில் சித்தார்த் , சரத்குமார், தேவயானி, யோகி பாபு ,மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
தினேஷ் கிருஷ்ணன் & ஜித்தின் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்வியல் கனவான சொந்த வீடு பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அறிமுக காணொளி ஆகியவை வெளியாகி படத்தை பற்றிய நேர் நிலையான அதிர்வை ஏற்படுத்திருக்க அதனை மேலும் அதிகரிக்கும் வகையில் இப்படத்தில் இடம்பெற்ற ' உன் கனவுக்கு சக்தியும் கிடையாது உன்னால் பறக்கவும் முடியாது..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கென பிரத்யேகமாக படமாக்கப்பட்ட காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் பால் டப்பா எழுதி பாடியிருக்கிறார். இவருடன் இசையமைப்பாளர் அம்ரித் ராமநாத்தும் இணைந்து குரல் கொடுத்திருக்கிறார்.
சுயாதீன இசை கலைஞரான பால் டப்பா இதற்கு முன் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ' பிரதர் ' திரைப்படத்தில் இடம் பெற்ற ' மக்காமிஷி..' பாடலை எழுதி பாடியிருந்தார். இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, தயாரிப்பாளருக்கு லாபத்தை அளித்தது.
இதனைத் தொடர்ந்து பால் டப்பா மீண்டும் றாப் மற்றும் துள்ளல் இசையின் பின்னணியில் பாடியிருக்கும் இந்தப் பாடலும் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM