கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற அஞ்சல் ரயில் ஹட்டன் கொட்டகலைக்கு இடையில் உள்ள பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இன்று அதி காலை 2 மணியளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் தடம் புரண்ட ரயிலின் 4 பொட்டிகளும் பாலமும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டறை தகவல் தெரிவித்துள்ளது.

சேதமடைந்த ரயில் பெட்டிகளை அகற்றி அஞசல் ரயில் பதுளை செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரயில் பாதை வழமைக்கு திரும்பும் வரை மலையக ரயில் சேவை ஹட்டன் மற்றும் கொட்டகலை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.